ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இப்படி ஒரு விஷயத்துக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இந்தியர்கள்! விவரம் இதுதான்!

இப்படி ஒரு விஷயத்துக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இந்தியர்கள்! விவரம் இதுதான்!

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா லாக்டவுன் காலகட்டத்திற்கு பிறகு மக்கள் வணிகர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையில் பெரும் மாற்றம் உருவாக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவில் உள்ள பிற சோசியல் மீடியாக்களை விட வாட்ஸ்அப் மூலமாக வணிக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதை மக்கள் விரும்புவதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

  இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப்பாக வாட்ஸ்அப் உள்ளது. குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் லண்டனை தளமாகக் கொண்ட டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் பிராண்ட் கன்சல்டிங் நிறுவனமான காந்தார் நடத்திய ஆய்வின் முடிவுகள், வாட்ஸ்அப் உடனான இந்திய மக்களின் தொடர்பு குறித்த அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ள விரும்பும் பயனர்களின் எண்ணிக்கையில் இந்திய முதலிடம் பிடித்திருப்பதாகவும், மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் போல வணிக நிறுவனங்களுடனும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  காந்தார் நிறுவனம் "பிசினஸ் மெசேஜிங் யூஸேஜ்" என்ற தலைப்பில் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிவதற்காக பல்வேறு நாடுகளில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் ஆச்சர்யப்படுத்தும் வகையில், இந்திய மக்களில் 86 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒருமுறையாவது வணிக நிறுவனங்களுக்கு மெசெஜ் அனுப்ப விரும்புவதாகவும், இது உலக அளவில் 66 சதவீதத்திற்கு சமானது என்றும் தெரிவித்துள்ளது.

  காந்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக ரீதியிலான தொடர்புகளுக்கு இந்திய மக்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை அதிக அளவில் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற சோசியல் மீடியாக்களை விட 400 மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்த விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 70 சதவீதம் பேர், மெயில் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் தொடர்பு கொள்வதை விட வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது உடனடியாக பதிலைப்பெற உதவுவதாக கருதுகின்றனர்.

  மெட்டா ஆதரவுடன் காந்தார் நிறுவனம் நடத்திய ஆய்வில், கொரோனா லாக்டவுன் காலகட்டத்திற்கு பிறகு மக்கள் வணிகர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையில் பெரும் மாற்றம் உருவாக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 72 சதவீத மக்கள் வணிகர்களுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாகவும், 75 சதவீதம் மக்கள் தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் வணிகர்கள் அல்லது வணிக நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  மெட்டாவின் வணிக செய்தியிடல் இயக்குனர் ரவி கார்க் கூறுகையில், "மக்கள் மற்றும் வணிகங்கள் தொடர்பு கொள்ளும் விதத்தில் பாரிய மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். இன்று, வாடிக்கையாளர்கள் பிராண்டுகளுடன் தொடர்பு கொள்ள விரைவான மற்றும் எளிதான வழியை விரும்புவது மட்டுமல்லாமல், ஒரு பிராண்டுடன் இணைந்திருக்கவும் விரும்புகிறார்கள்.

  இந்தியாவில், பண்டிகைக் கால தேவை அதிகரித்து வருவதால், வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் பல பிராண்டுகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருக்கவும், தயாரிப்புத் தகவல்களை வழங்கவும், தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை வழங்கவும் எளிய மற்றும் அளவிடக்கூடிய தீர்வாக செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

  Read More: டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

  இதன் மூலம் வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாடு, இந்தியா மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளதை மெட்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Business, WhatsApp