டிக் டாக் இடத்தைப் பிடிக்கப் போராடும் சிங்காரி, போலோ உள்ளிட்ட ஆப்ஸ்கள் - கையாளும் யுக்திகள் என்ன?

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில், சிங்காரி, போலோ இந்தியா உள்ளிட்ட ஆப்கள் அந்த இடத்தைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

டிக் டாக் இடத்தைப் பிடிக்கப் போராடும் சிங்காரி, போலோ உள்ளிட்ட ஆப்ஸ்கள் - கையாளும் யுக்திகள் என்ன?
டிக்-டாக்
  • Share this:
இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, சிங்காரி, போலோ இந்தியா உள்ளிட்ட குறுகிய வீடியோ ஆப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களானது, இந்தியா முழுவதும் பரவிவரும் பல்வேறு மொழி பேசும் மக்களை இலக்காக வைத்து தீவிரமாக இயங்கி வருகின்றன. ஒரு குறுகிய வீடியோ ஆப்பை வடிவமைக்கும் புதிய நிறுவனமானது உலகெங்கிலும் குடியேறியுள்ள இந்திய பயனர்களை பெற இந்த முயற்சியை மேற்கொள்கிறது.

பங்களாதேஷில் உள்ள மக்கள் பங்களா மொழியில் ஆப்ஸ்களை பெறுகிறார்கள். அதே நேரத்தில் இலங்கையில் உள்ளவர்கள் தமிழை பயன்படுத்துகின்றனர் என்று போலோ இந்தியாவின் நிறுவனர் வருண் சக்சேனா கூறியுள்ளார். இலங்கையின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாக சிங்கள மொழி இருப்பதால், குறுகிய வீடியோ ஆப்பான "போலோ இந்தியா"வில் சிங்கள மொழியும் தொடங்கப்பட உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் போலோ இந்தியாவின் பயனர்களில் 42 சதவீதம் பேர் இந்தி மொழியில் தகவல் பெறுவதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். தொடர்ந்து 16 சதவீதம் தமிழில், தெலுங்கில் 17 சதவீதம் மற்றும் பங்களாவில் 10-11 சதவீதம் பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பிற நிறுவனங்கள் அல்லது ஆப்ஸ்களின் தொடக்கங்களைப் போல அல்லாமல் போலோ இந்தியா, ஆரம்பத்திலேயே உலகளவில் உள்ள இந்தியர்கள் மீது கவனம் செலுத்தியது.


பைட் டான்ஸ்சிற்கு சொந்தமான டிக் டாக், ஒரு சீன நிறுவனமாக இருந்த போதிலும் இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளர்களை பெற்றது. தெற்காசிய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக போலோ இந்தியா வெவ்வேறு மொழிகளில் பரிசோதனை செய்து கொண்டிருக்கையில், பெங்களூரை சேர்ந்த சமூக ஊடக தளமான "சிங்காரி" என்ற செயலி உலகம் முழுவதும் இருந்து பயனர்களைப் பெற்றுள்ளது.

சிங்காரி தற்போது 10 லட்சம் பயனாளர்களை கொண்டுள்ளது. தினசரி மூன்று லட்சம் பேர் சிங்காரி ஆப்பை பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த ஆப் 2.8 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


மற்றொரு குறுகிய வீடியோ ஆப்'பான "ரிஸில் ஆப்" ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்திய சந்தையை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது.அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆப் இந்தியாவில் அதன் பங்கை விரிவுபடுத்த ஹைதராபாத்தில் ஒரு பெரிய அணியுடன் களம் இறங்கியுள்ளது. தற்போது 95 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களுடன் ரிஸில் இங்கு பிரபலமடைந்து வருகிறது. "ரிஸில் ஆப்" நிறுவனர் நாராயணன் இதுகுறித்து கூறுகையில், தற்போது தங்கள் செயலி ஆங்கிலம், ஹிந்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது விரையில் மேலும் சில மொழிகள் இணைக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் டிக் டாக்   தடை செய்யப்படுவதற்கு முன்பே நாங்கள் இருந்தோம், எங்கள் "ரிஸில் ஆப்" ஒரு ட்விட்டர் தொடர்புடைய வீடியோ ஆப், இது தனித்துவமான பயனர் தளத்தையும் கொண்டுள்ளது என அமெரிக்காவில் வசிக்கும் கூகிளில் பணிபுரிந்த நாராயணன் கூறினார்.

இந்தியாவில் பல நிறுவனங்கள் டிக் டாக்கிற்கு மாற்றாக ஆப்ஸ்களை கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆரம்ப கட்ட நிறுவனமான மிட்ரான் டிவியுடன், சிங்காரி, போலோ இந்தியா மற்றும் ரிஸில் ஆப்,  ஷேர் சாட் மற்றும் ரொபோசோ உள்ளிட்டவை புதிய பயனர்களை பெற வித்தியாசமான வழிகளை முயற்சித்து பிரபலமடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading