இந்திய அம்மாக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வுத் தகவல்..!

36% அம்மாக்கள் லாக்டவுனில்தான் இன்ஸ்டாகிராம் என்கிற தளம் இருப்பதும், அதில் உள்ள விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர்

இந்திய அம்மாக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வுத் தகவல்..!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா ஊரடங்கு பலருக்கும் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். சுகாதாரத்தின் முக்கியத்துவம் மட்டுமல்லாது, வீட்டில் இருந்தபடியும் பொருளாதாரத்தைக் தக்க வைக்க என்ன செய்யலாம் என்கிற விஷயங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் உலகைச் சார்ந்து வாழும் நிலை பரவலாகியுள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றம் இனி வரும் காலங்களில் எப்படி நம்மை ஆளப்போகிறது என்பதே எதிர்கால மாற்றமாக இருக்கப்போகிறது.

அந்தவகையில் இந்திய அம்மாக்களையும் இந்த டிஜிட்டல் உலகம் ஈர்த்துள்ளது என்றால் ஆச்சரியம் இல்லை. கிச்சன், குடும்பம் இதுதான் உலகம் என்றிருந்த அம்மாக்களுக்குக் கூட இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் புதிய உலகை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லாக்டவுனால் குறைந்தது தினம் 2 - 3 மணி நேரமாவது ஆன்லைனில் தங்கள் நேரத்தை செலவிடுவதாக The Digital Usage of the Indian Moms என்கிற தலைப்பில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.




இதில் 36% அம்மாக்கள் லாக்டவுனில்தான் இன்ஸ்டாகிராம் என்கிற தளம் இருப்பதும், அதில் உள்ள விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கென கணக்கும் துவங்கியுள்ளனர். 23% அம்மாக்கள் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்துகொள்வதாகவும், 30% அம்மாக்கள் ஷாப்பிங் செய்வதாகவும் கூறியுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகள் 'சர்க்கரை அளவு டெஸ்ட்' எப்போதெல்லாம் செய்ய வேண்டும்..? சுயமாக செய்வதால் என்ன ஆபத்து..?இதிலும் முதலிடத்தில் உள்ளது வாட்ஸ்அப். அதில் ஷேரிங் விஷயங்கள் வசதியாக உள்ளதாக கூறியுள்ளனர். பல செய்திகள் அதிலிருந்துதான் தெரிந்துகொள்வதாகக் கூறியுள்ளனர். இவ்வளவு இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய விருப்பமில்லை என 55% அம்மாக்கள் கூறியுள்ளனர். 32% அம்மாக்கள் பேரண்டிங் ஆப்தான் விருப்பமான நம்பகத்தன்மை கொண்டது எனக் கூறியுள்ளனர். 18% பேர் மற்ற சமூகவலைதளங்களைக் கூறியுள்ளனர்.

இறுதியாக இந்த மாற்றம் டிஜிட்டல் சந்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் டிஜிட்டல் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் ஆய்வில் கூறியுள்ளனர்.










பார்க்க :

 

 
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading