ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5G சேவையை பயன்படுத்த சாஃப்ட்வேர் அப்டேட் இல்லாமல் தவிக்கும் யூஸர்கள்

5G சேவையை பயன்படுத்த சாஃப்ட்வேர் அப்டேட் இல்லாமல் தவிக்கும் யூஸர்கள்

5ஜி

5ஜி

நாட்டில் 5G சேவை அறிமுகப்படுத்தப்பட்டும், 5G மொபைல் வைத்திருக்கும் யூஸர்களால் 5G சர்விஸை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5G சேவைகள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் இந்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யூஸர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் 4G சிம்களை கொண்டே இந்த புதிய 5G சேவைகளை அணுகலாம் என்று டெலிகாம் நிறுவனங்கள் உறுதிபடுத்தி உள்ளன.

  முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ 4 நகரங்களிலும், ஏர்டெல் 8 நகரங்களிலும் சேவையை துவங்கியுள்ளன. ஆனால் 5G சேவைகளை சப்போர்ட் செய்யும் மொபைல்களை யூஸர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  5G சேவை துவக்கப்பட்டுள்ள நகரங்களில் வசிக்கும் 5G-யை சப்போர்ட் செய்யும் மொபைல்களை வைத்துள்ள யூஸர்கள் சிலரால் இந்த சேவையை அணுகமுடியவில்லை. 5G ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலும் 5G-ஐ பயன்படுத்த முடியாததற்கு முக்கிய காரணம், இந்த அதிவேக சேவையை யூஸர்கள் தங்கள் 5G மொபைல்களில் எனேபிள் செய்ய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து ஒரு சிறிய சாஃப்ட்வேர் அப்டேட் தேவைப்படுகிறது.

  ஒரு சில ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே 5G-ஐ எனேபிள் செய்வதற்கான சாஃப்ட்வேர் அப்டேட் வெளியிடத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளர்களும் 5G மொபைலில் 5G சர்விஸை எனேபிள் செய்வதற்கான அப்டேட்களை விரைவில் வெளியிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

  பெரும்பாலான ரியல்மி, சியோமி, போக்கோ, ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், iQOO 5G மொபைல்களில் படிப்படியாக தற்போது அதிவேக இன்டர்நெட்டிற்காக 5G சேவையை பயன்படுத்துவதற்கான சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  எனினும் பிரீமியம் பிராண்டுகளான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் 5G மொபைல்கள் இன்னும் உரிய அப்டேட்டை பெறவில்லை. குறிப்பாக ஐபோன் மாடல்கள் எதிலும் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5G நெட்வொர்க்கை எனேபிள் செய்ய முடியாது

  இதனால் நாட்டில் 5G சேவை அறிமுகப்படுத்தப்பட்டும், 5G மொபைல் வைத்திருக்கும் யூஸர்களால் 5G சர்விஸை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய iPhone 14 இன்னும் 5G-க்கான அப்டேட்டை பெறவில்லை. ஏர்டெல் தங்கள் பிரீமியம் வாடிக்கையாளர்களில் பலர் ஆப்பிள் டிவைஸ்களை பயன்படுத்துவதால் இது குறித்து கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இதனிடையே இந்த சிக்கலை தீர்க்க முன்னணி ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பாளர்கள் மற்றும் நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த கூட்டத்திற்கு ஆப்பிள், சாம்சங், சியோமி மற்றும் விவோ போன்ற முக்கிய ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த கூட்டத்தில் இந்தியாவில் 5G-ஐ எனேபிள் செய்ய டிவைஸ்களுக்கான அப்டேட்டை வெளியிட முன்னுரிமை அளிக்குமாறு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை அரசு வலியுறுத்தும் என்று தெரிகிறது.

  Read More: துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!

   இதனிடையே சமீபத்தில் வெளியான ஏர்டெல்லின் 5ஜி-தயாராக உள்ள டிவைஸ்களின் பட்டியலின்படி ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் பல 5ஜி மொபைல்கள் இன்னும் அப்டேட்டை பெறவில்லை, அதே சமயம் மற்ற நிறுவனங்களின் பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்கள் 5G சேவையை பயன்படுத்த தயாராக இருப்பதை காட்டுகின்றன.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Airtel, Internet, Jio