Home /News /technology /

அம்மாடியோவ்.. இந்திய டேட்டா துறையின் மதிப்பு இவ்வளவா...!! - இன்னும் 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும்.!

அம்மாடியோவ்.. இந்திய டேட்டா துறையின் மதிப்பு இவ்வளவா...!! - இன்னும் 3 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும்.!

இந்திய டேட்டா துறை

இந்திய டேட்டா துறை

Indian data industry | தற்பொழுது நாடு முழுவதும் 138 டேட்டா சென்டர்கள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 11 மில்லியன் சதுர அடியாகும். இவை 737 MW ஐடி கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இவற்றில் 59% சதவிகிதம் சென்னை மற்றும் மும்பையில் அமைந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தகவல் தொழில்நுட்பத் துறை அசுர வளர்ச்சி கண்டு வரும் அதே நேரத்தில் அதை சார்ந்த பல்வேறு துறைகளும் பெரிய வளர்ச்சியும் முன்னேற்றமும் கண்டுள்ளன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டியது டேட்டா துறை. இந்திய டேட்டா துறை, கணிசமாக வளர்ந்துள்ளது என்பதை அதன் மதிப்பை வைத்தே அறிந்து கொள்ளலாம். இந்திய தரவுத் துறையின் மதிப்பு கிட்டத்தட்ட 5.6 பில்லியன் டாலர்கள் என்று தற்போதைய அறிக்கைகள் கூறுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் புதிதாக 45 டேட்டா சென்டர்கள் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்பொழுது நாடு முழுவதும் 138 டேட்டா சென்டர்கள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 11 மில்லியன் சதுர அடியாகும். இவை 737 MW ஐடி கெப்பாசிட்டி கொண்டுள்ளது. இவற்றில் 59% சதவிகிதம் சென்னை மற்றும் மும்பையில் அமைந்துள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு தரவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவதும் 13 மில்லியன் ஸ்கொயர் ஃபீட் அளவில் 45 புதிய டேட்டா சென்டர்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும், இவை 1015 MW ஐடி கெப்பாசிட்டி கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் டேட்டா சென்டர்கள் மற்றும் புதிதாக வரவிருக்கும் டேட்டா சென்டர்களை கணக்கிட்டால், நாடு முழுவதும் 153 டேட்டா சென்டர்களும் 24 மில்லியன் ஸ்கொயர் ஃபீட்டில் 1762 மெகாவாட் ஐடி கெப்பாசிட்டியுடன் இயங்கும். சென்னை மற்றும் மும்பை, ஆகிய இந்தியாவின் இரண்டு மெட்ரோ சிட்டிகளில் தான் கிட்டத்தட்ட 70% இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. டேட்டா சென்டர் வளர்ச்சியில் இந்தியா தான் முன்னணியில் இருக்கின்றது என்று டேட்டா சென்டர் ஆலோசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



உலக அளவில் தொழில்நுட்ப தகவலும், டிஜிட்டல் மயமாக்கலும் துரிதமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டு வளர்ச்சியை, கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்த வளர்ச்சியின் வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகிறது. 2025ல் நாட்டின் ஒட்டு மொத்த டேட்டா சென்டர்கள் தேவை 2100 MW ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

தற்பொழுது டேட்டா சென்டர்கள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டாலும் எதிர்காலத்தில், திட்டமிடப்படாமல் நடைபெற இருக்கிறது என்றும் டேட்டா சென்டர்கள் பற்றிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது போன்ற எதிர்கால திட்டமிடல்கள் எல்லாமே, முந்தைய திட்டங்களின் வழியே பெறப்பட்ட முடிவுகளில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு

பின்ஸ்வாக்னர் என்ற நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளரான ஜெஃப் வாக்னர் தெரிவிக்கையில், ‘இந்திய, ஆசிய பசிஃபிக் பகுதிகளில் முடிவு எடுப்பதில் டேட்டா மையங்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன’ என்று கூறினார்.



இந்திய டேட்டா சென்டர் துறை எவ்வாறு இயங்கி வருகிறது என்பது பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று துறை சார்ந்த பலரிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நிறுவனங்களில், எவ்வாறு தரவு சார்ந்த வேலைகளை அமைப்பது, நிர்வகிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பற்றிய தொழில்நுட்பத் துறை நிபுணர்களின் கருத்தையும் ஆய்வு பதிவு செய்தது.

Also Read : 2000க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் - இது தான் காரணம்.!

டேட்டா சென்டர் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் கூற்று படி, கிட்டத்தட்ட 30% நிறுவனங்கள், டேட்டா மேனேஜ்மென்ட் என்று வரும் போது, ஹைப்ரிட் சேவைகளைத் தான் விரும்புகின்றன, அதாவது கிளவுட் சேவைகள். ஐடி கான்ஃபிகரேஷன், மானிட்டரிங், டிசைன் மற்றும் மதிப்பீடு ஆகியவை அவுட்சோர்ஸ் செய்ய தயாராக இருக்கும் சேவைகளாகும். டேட்டா சென்டர்களின் வழியே செலவுகளைக் குறைத்து, சுருக்கமாக டேட்டாவை வழங்கி, பெர்ஃபார்மான்ஸ் மேம்படுத்துவது தான் ஐடி நிபுணர்களின் நோக்கம் ஆகும்.

டேட்டா சென்டர்களில் பணியமர்த்தப்படும் தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: India, Technology

அடுத்த செய்தி