ஸ்மார்ட் ஆக்சஸரீஸ் மற்றும் ஆடியோ பிராண்டான கிஸ்மோர் (Gizmore), கிஸ்ஃபிட் 910 ப்ரோ (Gizfit 910 Pro) என்கிற புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்வதன் வழியாக, அதன் ப்ராடெக்ட் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது. அறியாதோர்களுக்கு கிஸ்மோர், டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு இந்திய நிறுவனம் ஆகும்.
கிஸ்மோர் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது செவ்வக வடிவிலான டிஸ்பிளே மற்றும் ப்ளூடூத் காலிங் செயல்பாடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் பல வகையான ஸ்போர்ட்ஸ் மோட்-களையும் வழங்குகிறது மற்றும் ஹார்ட் ரேட் சென்சார், எஸ்பிஓ2 மற்றும் ப்ளட் ப்ரெஷர் மானிட்டர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
கிஸ்ஃபிட் 910 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்சின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கிஸ்ஃபிட் 910 ப்ரோ ஆனது ரூ.5,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்சை வெறும் ரூ.2,499 என்கிற அறிமுக விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே பிளிப்கார்ட் வழியாக ஆன்லைனில் வாங்க கிடைக்கிறது.
கிஸ்ஃபிட் 910 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்சின் விரிவான அம்சங்கள்:
கிஸ்ஃபிட் 910 ப்ரோ ஆனது 1.69 இன்ச் அளவிலான ரெக்டாங்குலர் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் டிஸ்பிளே 500 நிட்ஸ் ப்ரைட்னஸ்-ஐ பேக் செய்கிறது. ஹை-குவாலிட்டி மெட்டல் டயலுக்குள் அமரந்தபடி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஸ்மார்ட்வாட்ச் பல ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் ப்ளூடூத் காலிங் அம்சத்திற்கான ஆதரவும் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் இன்-பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கரும் உள்ளது.
எஸ்பிஓ2, ப்ளட் பிரெஷர், ஹார்ட் ரேட், ஹைட்ரேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய துல்லியமான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அளவீடுகளை வழங்க இந்த ஸ்மார்ட்வாட்ச் பல சென்சார்களையும் கொண்டுள்ளது. வாக்கிங், ஸ்விம்மிங், ரன்னிங், சைக்கிளிங் மற்றும் பாஸ்கெட் பால் உள்ளிட்ட யூசர்களின் உடல் சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் பல ஸ்போர்ட்ஸ் மோட்களும் இதில் உள்ளன.
Also read... விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..
கிஸ்ஃபிட் 910 ப்ரோவின் ஹைட்ரேஷன் சார்ந்த எச்சரிக்கையானது, குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்குமாறு யூசர்களுக்கு அறிவிப்பதன் மூலம் அவர்களை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்து இருக்க உதவுகிறது.
100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும். மேலும் இரண்டு மணி நேரத்திற்குள் இதன் பேட்டரியை 100% சார்ஜ் செய்ய முடியும். மிகவும் சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஐபி67 மதிப்பீட்டின் கீழ் நீர்-எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் அணுக கிடைக்கும் நிறுவனத்தின் கோ ஃபிட் (CO FIT) ஆப்பின் வழியாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கனெக்ட் செய்யலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.