உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பகால பிரபஞ்சத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேறு பிரபஞ்சகளில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அதீத தூரத்தின் காரணமாக பூமியில் உள்ள தொலைநோக்கிகள் இந்த ரேடியோ சிக்னல்களை எடுப்பது கடினமாக உள்ளன.
இந்தியா மற்றும் மாண்ட்ரீலைச் சேர்ந்த வானியலாளர்கள், இந்தியாவில் உள்ள ராட்சத மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி தூரத்தில் உள்ள சமிக்ஞைகளை பெற நீண்ட காலமாக முயற்சித்து வந்தனர். அப்படி மிக தொலைதூர விண்மீன் மண்டலத்திலிருந்து 21 செ.மீ அலைநீளத்தில் ஒரு ரேடியோ சமிக்ஞையை தற்போது கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மெக்கில் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் அர்னாப் சக்ரவர்த்தி, “ஒரு விண்மீன் பல்வேறு வகையான ரேடியோ சிக்னல்களை வெளியிடுகிறது. இப்போது வரை, அருகிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்திலிருந்து மட்டுமே சிக்கனல்களை கைப்பற்ற முடிந்தது."
புவியீர்ப்பு லென்சிங் எனப்படும் இயற்கையாக நிகழும் நிகழ்வின் உதவியால் தான் பூமியிலிருந்து அதிக தொலைவில் உள்ள விண்மீன் திரள்களின் கலவையில் இருந்து இந்த மங்கலான சமிக்ஞையை பெற முடிந்தது என்றார்.
ராயல் அஸ்ட்ரோனமிகல் சொசைட்டியின் மாதாந்திர இதழில் வெளியிடப்பட்ட விவரங்கள் படி , விண்மீன் திரள்களின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கு நடுநிலை வாயுவான ஹைட்ரஜனின் அண்ட பரிணாமத்தைப் பற்றிய அறிவு தேவை. SDSSJ0826+5630 எனப்படும் தொலைதூர நட்சத்திரத்தை உருவாக்கும் விண்மீன் மண்டலத்தில் இருந்து இந்த சமிக்ஞை கண்டறியப்பட்டது. அதனுடன் கலந்திருந்த ஹைட்ரஜனின் பரிமானங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த குறிப்பிட்ட விண்மீன் மண்டலம் நாம் காணக்கூடிய நட்சத்திர மண்டலங்களை விட இரண்டு மடங்கு பெரியது. பிரபஞ்சம் 13.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பிரபஞ்சம் 4.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்தபோது இந்த சமிக்ஞை வெளியிடப்பட்டது. இது ஆரம்பகால பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ச்சியாளர்களுக்குக் காண உதவும். இது 8.8 பில்லியன் ஆண்டுகளில் திரும்பிப் பார்ப்பதற்குச் சமம் என்று தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.