ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் இன்டர்நெட் சேவை!

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் இன்டர்நெட் சேவை!

சியாச்சின்

சியாச்சின்

இந்திய ராணுவம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) உடன் இணைந்து, சியாச்சினில் 19,061 அடி உயரத்தில் நிலைகொண்டுள்ள துருப்புக்களுக்கு இணைய சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இமயமலையின் கிழக்கு காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவம் செயல்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவம், முழு அரசாங்கத்துக்குச் சொந்தமான பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு வழங்குநர் நிறுவனமான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) உடன் இணைந்து, சியாச்சினில் 19,061 அடி உயரத்தில் நிலைகொண்டுள்ள துருப்புக்களுக்கு இணைய சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக இமாலயத்தில் இருக்கும் சியாச்சின் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப்பிற்கும் உட்படுத்தி வருகிறது. அதில் இருந்து சியாச்சின் பனி பகுதியை பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படையுடன் எல்லையில் தகவல் தொடர்பு மற்றும் அடுத்தடுத்த செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரிக்க உதவும் வளர்ச்சி குறித்து தெரிவிக்க இந்த இணைய சேவை உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

தற்போது, ​​BBNL அதன் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 7,000 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கிராமப்புற தொலைதூர பகுதிகளுக்கு செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவையை வழங்குவதற்கு வேலை செய்கிறது. அரசாங்கத் தரவுகளின்படி, இவற்றில் 4,000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டுவிட்டன.

இணைப்பை எளிதாக்குவதற்கு செயற்கைக்கோள் பிராட்பேண்டைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில், மற்ற தனியார் நிறுவனங்களும் இணைய சேவை சந்தையில் நுழைந்துள்ளன.

ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா (HCI) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து கடந்த வாரம், நாட்டில் தனது முதல் உயர் செயல்திறன் செயற்கைக்கோள் (HTS) பிராட்பேண்ட் இணைய சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட சீன வீரர்கள்..!

இஸ்ரோவின் கு-பேண்ட் திறன் கொண்ட ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-29 செயற்கைக்கோள்கள் இந்தியா முழுவதும் உள்ள தொலைதூர இடங்களுக்கு அதிவேக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

HTS தொழில்நுட்பத்தின் மூலம், நிறுவனம் ஏற்கனவே இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) மற்றும் பிற தொலைதூர எல்லைப் புறக்காவல் நிலையங்களில் ரோந்து செல்லும் இடங்களில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: ISRO, Siachen