அமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது!

மேடையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறிக் கத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

அமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது!
அமேசான் நிறுவனருக்கு எதிர்ப்பு
  • News18
  • Last Updated: June 8, 2019, 5:16 PM IST
  • Share this:
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமேசான் நிறுவனரை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமேசான் "re:MARS" என்றதொரு நிகழ்வை கடந்த வியாழக்கிழமை லாஸ் வேகாஸ் நகரில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் கலந்துகொண்டார். அப்போது பிசோஸிடம் ‘கோழிப் பண்ணைகள்’ குறித்த ஒரு கேள்வியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் ஆன பிரியா ஷானி கேட்டார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமேசான் நிறுவனத்துக்கு கோழிக்கறி மற்றும் டர்கி கறி விற்கும் பண்ணைகளின் மிருகவதையைத் தடுக்கக் கோரிய பிரியா உடனே கைது செய்யப்பட்டார். மேடையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறிக் கத்தியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.


“உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான நீங்கள், அமேசானின் நிறுவனரான நீங்கள்...கலிஃபோர்னியா பண்ணைகளில் நடக்கும் மிருக வதையைத் தடுங்கள்” என மேடையில் ஏறிக் கத்திய பிரியா ஷானி சான் பிரான்சிஸ்கோ நகரில் மிருக உரிமைக்காகப் போராடும் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆவார்.

மேலும் பார்க்க: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலா - விளக்கமளித்த ட்ரம்ப்பை கலாய்த்த நெட்டிசன்கள்!
First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்