இந்திய விமானப் படை தயாரிப்பில் வெளியாகிறது புதிய மொபைல் கேம்..!

இதற்கு முன்னர் ‘கார்டியன் ஆஃப் தி ஸ்கைஸ்’ என்ற ராணுவ விளையாட்டின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய விமானப் படை தயாரிப்பில் வெளியாகிறது புதிய மொபைல் கேம்..!
ராணுவ ஆன்லைன் கேம்
  • News18
  • Last Updated: July 31, 2019, 1:48 PM IST
  • Share this:
இந்திய விமானப் படையின் தயாரிப்பில் உருவான மொபைல் கேம் இன்று வெளியாகிறது.

'Indian Air Force: A Cut Above’ எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் கேம்-ல் ஒரு விமானப் படை வீரரின் அத்தனை செயல்பாடுகளும் சந்திக்கக்கூடிய தாக்குதல்களும் ஆன்லைன் விளையாட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விங்-கமாண்டர் அபிநந்தனின் சாதனை மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களும் கேம்-ல் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆன்லைன் கேம் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் மூலம் இந்த கேம் விளையாடும் வீரர்களுக்கு ராணுவ விமானங்கள், ஜெட் விமானங்கள், கார்கோ ஆகியவற்றையும் ராணுவ மெஷின் துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த டீசரில் அபிநந்தன் வர்த்தமானின் உருவத்தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


’த்ரே- மிலிட்டரி கேம்ஸ்’ என்னும் நிறுவனம் வடிவமைப்பில் இந்த இந்திய விமானப் படை கேம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் இந்த விளையாட்டை விளையாட முடியும். இதற்கு முன்னர் ‘கார்டியன் ஆஃப் தி ஸ்கைஸ்’ என்ற ராணுவ விளையாட்டின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இளம் பணக்காரராக இணைகிறார்‘BYJU's’ரவீந்திரன்!
First published: July 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்