5G Users: இந்தியாவில் 5ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் - எப்போது தெரியுமா?

5ஜி

கடந்த வருடம் தனி நபர் டேட்டா பயன்பாடு மாதத்துக்கு 14.6 ஜிபியாக இருந்தது.

  • Share this:
வருகிற 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி பயன்படுத்துபர்களின் எண்ணிக்கை 33 கோடியாக இருக்குமாம்.

இந்தியாவில் விரைவில் 5ஜி பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வருகிற 2026ம் ஆண்டு 5ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 33 கோடியாக இருக்கும் என எரிக்சன் மொபிலிட்டி தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் 5ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் 5 வருடங்களில் 43 கோடி மக்கள் புதிதாக ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்குவார்கள் என எரிக்சன் மொபிலிட்டி நிறுவனம் தெரிவிக்கிறது. மக்கள் இப்பொழுது இருப்பதை விட செல்போன் பயன்பாட்டுக்கு 50 சதவிகிதம் அதிகம் செலவிட வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் டேட்டா பயன்பாடும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதாம். கடந்த வருடம் இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 9.5 இபி(Exabyte) பயன்படுத்தப்பட்ட நிலையில் இது வருகிற 2026 ஆம் ஆண்டு டேட்டா பயன்பாடானது 41இபி வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் தனி நபர் டேட்டா பயன்பாடு மாதத்துக்கு 14.6 ஜிபியாக இருந்தது. ஆனால் 2026 ஆம் ஆண்டு தனி நபர் டேட்டா பயன்பாடு 40 ஜிபியாக இருக்குமாம். வருகிற 2026 ஆம் ஆண்டு 66 சதவிகிதம் 4ஜி பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். 26 சதவிகிதத்தினர் 5ஜி கனெக்சன் பெற்றிருப்பார்கள். ஸ்மார்ட் போன் கனெக்சன் பெறுபவர்கள் 98 சதவிகிதமாக இருப்பார்கள். அப்பொழுது 2ஜி மற்றும் 3ஜி பயன்பாடு நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

தற்போது ஜியோ இந்தியாவின் முதல் 5ஜி நெட்வொர்க்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும். விலையைப் பொறுத்தவரை துவக்கத்தில் விலை அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதன் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கும் போது விலை குறையலாம்.

Also read... COVID vaccine certificate: கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

கொரோனா நோய் தொற்று காலத்தில் கடந்த சில வருடங்களைக் காட்டிலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆன்லைன் கிளாஸ், வீட்டிலேயே இருந்து பணி செய்யும் சூழல்களால் இந்த நிலையுள்ளது. ஆன்லைன் பொருட்களை வாங்குவது, மன் கட்டணம் கட்டுவது, பண பரிமாற்றம் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட் போன் பெரிதும் கைகொடுத்து உதவுகிறது.

இப்படி சராசரியாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்திருக்கிறது. 3ஜி, 4ஜி சேவைகளை அதன் அறிமுகப்படுத்திய போதே பயன்படுத்தியவர்கள் குறைவு. ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: