ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அக்னி ஏவுகணை: இரவு நேர சோதனை வெற்றி

அக்னி ஏவுகணை: இரவு நேர சோதனை வெற்றி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அக்னி ஏவுகணையை இரவு நேரத்தில் ஏவி பரிசோதனை செய்யும் முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

  தரையில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ஏவுகணையை இந்தியா தயாரித்து ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்துள்ளது.

  எனினும் அக்னி ஏவுகணையை இரவு நேரத்தில் இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை. அதைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலாசூர் மையத்தில் நேற்று இரவு அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது.

  அக்னி ஏவுகணை நிர்ணயித்த இலக்கை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் தாக்கியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Published by:Prabhu Venkat
  First published: