இந்திய கடற்படையின் 'அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்ததாக, ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கக் கூடிய 'அரிஹந்த்' நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த சோதனை வெற்றி என்பது இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறனின் முக்கிய அங்கமான நிலத்தின் அடியில் இருந்து தாக்கும் SSBN திட்டத்தை வலுவாக்க முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!
அரிஹந்தால் செலுத்தப்படும் அணுசக்தி ஏவுகணை மூலம், சீனா மற்றும் பாகிஸ்தானை நீர்மூழ்கி கப்பலில் இருந்தே துல்லியமாக தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைகளை செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துள்ளன. அப்பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
INS அரிஹந்த் (SSBN 80) என்பது ஒரு நியமிக்கப்பட்ட S2 உத்திசார் தாக்கக்கூடிய திறன் கொண்ட அணுசக்தியாழ் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை-நீர்மூழ்கிக் கப்பல்களின் முன்னணிக் கப்பலாகும்.
அதன் வடிவமைப்பு ரஷ்யாவின் அகுலா-1 வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அடிப்படையாகக் கொண்டது. அதன் 83 மெகாவாட் அழுத்தம் கொண்ட நீர் உலை குறிப்பிடத்தக்க ரஷ்ய நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
6,000 டன் எடையுள்ள இந்தக் கப்பல், துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் மேம்பட்ட தொழில்நுட்பக் கப்பல் (ஏடிவி) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் விஜய் திவாஸ் (கார்கில் போர் வெற்றி நாள்) தினமான ஜூலை 26, 2009 அன்று அரிஹந்த் தொடங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nuclear, Test, Vishakapatnam