ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின், நாசா என்று பல வெளிநாட்டு தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா பற்றி பேசி வருகிறது. விண்வெளி சுற்றுலாக்களுக்கு மனிதர்களை அழைத்துச் சென்று கொண்டும் இருக்கிறது. இதெல்லாம் எப்போது நமக்கு கிடைக்கும். இந்தியாவில் எப்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம்.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் உங்கள் விண்வெளிப் பயணம் பற்றிய கனவு நனவாகும் ஆண்டாக இருக்கலாம். யார் அழைத்துப் போவார்கள் என்று கேட்கிறீர்களா? மும்பையை தளமாகக் கொண்ட ‘ஸ்பேஸ் ஆரா ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனம் தற்போது அதற்கான ஏற்பாடுகளையும் சோதனைகளையும் செய்து வருகிறது.
நிறுவனத்தின் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டிற்கு சுற்றுலாப் பயணிகள் பூமியில் இருந்து 35 கிமீ சுற்றளவுக்கு ஒரு தனித்துவமான உயரமான பலூன் அமைப்பில் இணைக்கப்பட்ட விண்கலத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தற்போது ஆறு பேர் மற்றும் ஒரு பைலட்டை விண்வெளிக்கு ஏற்றிச் செல்லக்கூடிய ஸ்பேஸ் கேப்சூலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் பாருங்க: செர்ரி ப்ளாசம்ஸ் திருவிழா.. இலக்கிய விழாவுடன் மேகாலயாவை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு...
அனைத்து உயிர்காக்கும் மற்றும் தகவல் அமைப்புகளுடன் பொருத்தப்பட்ட 10 அடி x 8 அடி அளவுள்ள விண்வெளி கேப்சூல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் இருந்து, பூமியின் அமைப்புகளையும், விண்வெளியின் பரந்த வெளியையும் பார்க்க முடியும். சுமார் ஒரு மணி நேர பயணமாக திட்டமிட்டுள்ள இது பயணிகளுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பூமிக்கு திரும்பும் நேரம், விண்வெளி கேப்சியூல் இணைக்கப்பட்ட பலூன் மெதுவாக காற்று குறைக்கப்பட்டு இறுதியில் துண்டிக்கப்படும். பின்பு பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு ஒரு பாராசூட் அதன் இடத்தைப் பிடிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இதை ஏவுவதற்கான தளங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் விதிக்கும் கட்டணங்களை விட விண்வெளிக்கு விமானத்தை மிகவும் குறைவான கட்டணத்தில் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.