2019-ல் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை 152 மில்லியன்...! முதலிடத்தைக் கைப்பற்றிய நிறுவனம் எது?

"5ஜி தொழில்நுட்பம் வளரும் காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பெரும் வளர்ச்சியைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது"

2019-ல் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை 152 மில்லியன்...! முதலிடத்தைக் கைப்பற்றிய நிறுவனம் எது?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 8, 2020, 12:01 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையின் மையப் புள்ளியாக இந்திய சந்தை திகழ்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 152.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனை ஆகியுள்ளன.

2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை விகிதம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு அறிக்கையை சர்வதேச தரவுகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியாக இந்தியா வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதுகுறித்து சர்வதேச தரவுகள் நிறுவனம் ஆய்வு மேலாளர் உபசனா கூறுகையில், “தொடர்ந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தள்ளுபடிகள், ஆன்லைன் விற்பனைச் சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர், வட்டியில்லா தவணை, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியன போன்களின் விற்பனையை அதிகைத்துள்ளன. ஆன்லைன் மூலமான விற்பனைதான் சுமார் 18 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆஃப்லைன் விற்பனை 1.6 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது” என்றார்.


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் சராசரி விலை 15 ஆயிரம் ரூபாய். சுமார் 79 சதவிகிதப் போன்கள் இந்த பட்ஜெட்டினுள் மட்டுமே உள்ளன. 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் இடையிலான பட்ஜெட்டில் போன் விற்பனை 19.3 சதவிகிதமாக உள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 1.7 சதவிகிதமாக உள்ளது. இந்தப் பிரிவில் ஆப்பிள் முன்னிலை இடம் வகிக்கிறது.

மத்திய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் விவோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக 5ஜி தொழில்நுட்பம் வளரும் காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பெரும் வளர்ச்சியைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் பயனாளர்களே... இந்த சின்ன ‘ட்ரிக்’ உங்கள் போனை ஹேக்கர்களிடமிருந்து காப்பாற்றும்!
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்