டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் வேர்ல்ட் சீரிஸ், 2020 என்ற நிகழ்ச்சியை TM Forum ஏற்பாடு செய்திருந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இதில் சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், டேட்டா புரட்சியில் உலகளாவிய முன்னேற்றத்தின் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்க மட்டும், இந்தியா தயாராக இல்லை, ஆனால், புரட்சியையே வழிநடத்த தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்திய தொலைத் தொடர்புத் துறை தனது 2 ஜி நெட்வொர்க்கை உருவாக்க 25 ஆண்டுகள் ஆனது, ஜியோ தனது 4 ஜி நெட்வொர்க்கை மூன்று ஆண்டுகளில் மட்டுமே உருவாக்கியது. டேட்டாவை பரவலாக ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்ய, உலகின் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களுடன் தொடங்கினோம், மேலும் ஜியோ பயனர்களுக்கு குரல் சேவைகளை முற்றிலும் இலவசமாக்கினோம் என்று அவர் தனது பேச்சில் குறிப்பிடார்.
போர்ப்ஸ் இந்தியா சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது