உலகிலேயே குறைந்த விலையில் டேட்டா கிடைப்பது இந்தியாவில்தானாம்!

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

news18
Updated: March 6, 2019, 10:43 AM IST
உலகிலேயே குறைந்த விலையில் டேட்டா கிடைப்பது இந்தியாவில்தானாம்!
மாதிரிப்படம்
news18
Updated: March 6, 2019, 10:43 AM IST
230 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் உலகிலேயே குறைந்த விலையில் மொபைல் டேட்டா இந்தியாவில்தான் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொபைல் நெட்வொர்க் சந்தையில் 2016-ம் ஆண்டு ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்புகளுடன் காலடி எடுத்து வைத்தது. இலவச 4ஜி டேட்டா என்ற அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதோடு குறுகிய காலகட்டத்திலேயே ஜியோவில் கோடிக்கணக்கானோர் இணைந்தனர்.

ஜியோவின் திட்டத்தால் பலரும் அங்கு மாறவே, போட்டியை சமாளிக்க மற்ற நெட்வொர்க் நிறுவனங்களும் டேட்டா விலையை குறைத்தன. தற்போதும், டேட்டா சந்தையில் ஜியோவின் போட்டியை மற்ற நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை.


Read Also... 50 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் ஸ்மார்ட்போன்...!

இந்நிலையில், 230 நாடுகளில் மொபைல் டேட்டா குறித்து லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில், இந்தியாவில் தான் குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ரூ.18.30 ரூபாயில் இந்தியாவில் 1 ஜி.பி மொபைல் டேட்டா கிடைக்கிறது.

இதுவே, பிரிட்டனில் 1 ஜி.பி மொபைல் டேட்டா ரூ.469.77 விலையாக உள்ளது. அமெரிக்காவில் இது ரூ.872.51ஆக உள்ளது.

Loading...

டாப் 5 இடங்களில் இந்தியா, கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான், உக்ரைன் மற்றும் ரூவாண்டா நாடுகள் உள்ளன. பட்டியலின் கடைசி இடத்தில் ஜிம்பாவே உள்ளது. அங்கு 1 ஜி.பி டேட்டாவின் விலை சராசரியாக ரூ.5,305.02 என்ற விலையில் கிடைக்கிறது.

செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also See...

First published: March 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...