Home /News /technology /

இனி செய்தி நிறுவனங்களுக்கு வருவாயில் பங்கு... கூகுள், பேஸ்புக், மெட்டாவிற்கு புது செக்!

இனி செய்தி நிறுவனங்களுக்கு வருவாயில் பங்கு... கூகுள், பேஸ்புக், மெட்டாவிற்கு புது செக்!

மாதிரி படம்

மாதிரி படம்

உள்ளூர் வணிகத்திற்குப் பயனளிக்கும் புதிய விதிமுறைகள் காரணமாக, கூகுள் மற்றும் பேஸ்புக் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு சுமார் $200 மில்லியன் செலுத்தியுள்ளன.

    செய்தி நிறுவனங்களின் செய்திகளை வெளியிடும் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், மெட்டா, இன்ஸ்டாகிராம் போன்ற பெரு தொழில் நுட்ப நிறுவனங்கள் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அந்த செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.

    ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிக் டெக் நிறுவனங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் ஆகியவை தங்கள் தளங்களில் இணைப்புகளைக் காண்பிப்பதற்காக செய்தி வெளியீட்டாளர்களுக்கு பணம் செலுத்துவது கட்டாயமாக்கியுள்ளது. இந்த அமைப்பை செயல்படுத்துவது உலகளவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவும் இதேபோன்ற நடவடிக்கையை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    கூகுள், மெட்டா, ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செய்திகளை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுவது குறித்து அரசாங்கம் யோசித்து வருவதாக சமீபத்தில் ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்திருந்தார். வெளியீட்டாளர்களின் செய்திகளை தங்களது பக்கத்தில் வெளியிடுவதற்கு ஈடாக அவர்களின் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Also Read : இந்த அழைப்புகளை நம்ப வேண்டாம்... ரயில் பயணிகளுக்கு IRCTC முக்கிய எச்சரிக்கை

    இதுகுறித்து மத்திய இணைய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில் "தற்போது பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பர சந்தையின் சக்தி, இந்திய ஊடக நிறுவனங்களை பாதகமான நிலைக்கு தள்ளுகிறது. இதனை தவிர்க்க புதிய சட்டப்பூர்வமாக்கல் மற்றும் விதிகளின் பின்னணியில் தீவிரமாக ஆராயப்படும் ஒரு பிரச்சனை" என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில், இந்தியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (டிஎன்பிஏ) மற்றும் இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) ஆகியவை இந்திய போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) புகார் அளித்தன. அதில் கூகுள் நிறுவனம் இந்த பிரச்சனையை கவனத்தில் கொள்ளாமல் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், செய்தி வெளியீட்டாளர்களுக்கு நியாயமற்ற நிபந்தனைகளை விதிப்பதாகவும் குற்றச்சாட்டினர்.

    பெரிய தொழில்நுட்பத்தில் REIN:

    டிஜிட்டல் யுகத்தில் குறைந்து வரும் வளங்களைச் சரிசெய்ய செய்தி நிறுவனங்கள் போராடுவதால், தொழில்நுட்ப வணிகங்கள் விரிவடைந்து, செல்வச் செழிப்பாக வளர்ந்து, நவீன வாழ்க்கையின் பல அம்சங்களில் மேலும் வேரூன்றியுள்ளன. கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில் நுட்ப ஜாம்பவான்கள் செய்தி நிறுவனங்களின் செய்திகளை வெளியிடுவதன் மூலம் வருமானம் ஈட்டினாலும், அவர்கள் வருவாயை நியாயமாக பகிர்ந்து கொள்ள தவறுவதால் சட்டத்தில் தேவை உருவாகியுள்ளது.

    தொழில்நுட்ப தளங்கள் தங்களது பக்கத்தில் செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தின் பதிவிடுவது அவர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவக்கூடும் என்றாலும், ஆனால் இதன் மூலமாக அதிக வருவாய் கிடைக்க வழியில்லை. எனவே செய்தி நிறுவனங்களின் செய்திகளை பதிவிடும் பெரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது.

    உள்ளூர் வணிகத்திற்குப் பயனளிக்கும் புதிய விதிமுறைகள் காரணமாக, கூகுள் மற்றும் பேஸ்புக் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு சுமார் $200 மில்லியன் செலுத்தியுள்ளன. கூகுள் மற்றும் ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் கட்டுப்பாட்டாளர் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இது போன்ற விதிகளை இயற்றும் உலகின் முதல் நாடு இதுவாகும். அதன் பிறகு, ஊடக நிறுவனங்களுடன் 30 சதவீத வருவாயை பகிர்ந்து கொள்வதாக பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

    கனடாவிலும், தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கத்தை பயனடையும் போது, ​​அவர்கள் கனட நிறுவனங்களுடன் வருவாயைப் பிரித்துக்கொள்வதை கட்டாயப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம், கனேடிய பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் ஆன்லைன் ஜர்னலிசம் சட்டம் அல்லது பில் C-18 ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்தி மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை எதிர்பார்க்கலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Facebook, Google, Instagram

    அடுத்த செய்தி