ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் ஸ்பீட் தரவரிசையில் 7 இடங்கள் பின்தங்கிய இந்தியா!

ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் ஸ்பீட் தரவரிசையில் 7 இடங்கள் பின்தங்கிய இந்தியா!

ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் ஸ்பீட் டெஸ்ட்

ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் ஸ்பீட் டெஸ்ட்

நிலையான இணையச் சேவையின் வேகத்தில் இந்தியா உலகளவில் முன்பைவிட 7 இடங்கள் பின் தங்கி 78வது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்டர்நெட் ஸ்பீட் ட்ராக்கர் Ookla-வின் ஆகஸ்ட் மாதத்திற்கான தரவுகளின்படி, உலக அளவில் நிலையான பிராட்பேண்ட் டவுன்லோட் ஸ்பீடிற்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா ஏழு இடங்கள் பின் தள்ளப்பட்டு உள்ளது. Ookla's Speedtest Global Index-ஆனது மாதாந்திர அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள மொபைல் மற்றும் ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் ஸ்பீடை தரவரிசைப்படுத்துகிறது.

Ookla-வின் கூற்றுப்படி, மொபைல் மற்றும் ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் டவுன்லோட் ஸ்பீடிற்கான உலகளாவிய சராசரி முறையே 30.79Mbps மற்றும் 69.14Mbps ஆகும். இந்தியாவின் நெட் ஸ்பீட் உலக சராசரியை விட இரண்டு பிரிவுகளிலும் குறைவாகவே உள்ளது. உலகளவில் ஒட்டுமொத்த சராசரி நிலையான பிராட்பேண்ட் வேகத்தில் (Fixed Broadband Speeds) இந்தியா ஏழு இடங்கள் வீழ்ச்சியடைந்து, ஆகஸ்ட் மாதம் 78-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

இதே பட்டியலில் கடந்த ஜூலையில் 71-வது இடத்தில் இந்தியா இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த நிலையான டவுன்லோட் ஸ்பீட் (overall fixed download speeds) ஜூலையில் 48.04Mbps-ஆக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 48.29Mbps-ஆக அதிகரித்தது. எனினும் கூட ஆகஸ்ட் மாதத்தில் தரவரிசை பட்டியலில் இந்தியா ஜூலையிலிருந்ததை விட 7 இடங்கள் பின்தங்கியது.

மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில், இந்தியாவின் நிலை மாறாமல் 117 ஆக இருந்தது. சராசரி மொபைல் பதிவிறக்க வேகமும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் இடையே 13.41Mbps லிருந்து 13.52Mbps ஆக அதிகரித்தது. அதே நேரம் சராசரி மொபைல் நெட் வேகத்திற்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா தனது 117-வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Also Read : விண்டோஸ் 11 2022 புதிய அப்டேட்டை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட்.!

சராசரி மொபைல் டவுன்லோட் ஸ்பீட் 13.41 Mbps-லிருந்து 13.52 Mbps-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆகஸ்ட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் படி, பிரேசில் தரவரிசையில் மிக உயர்ந்த அதிகரிப்பைப் பதிவு செய்தது. ஒட்டுமொத்த உலகளாவிய சராசரி மொபைல் நெட் ஸ்பீடில் நார்வே முதலிடத்தில் உள்ளது.

overall global fixed median speeds-ல் பாலஸ்தீனம் 27 இடங்கள் முன்னேறி தரவரிசையில் மிக உயர்ந்த அதிகரிப்பைப் பதிவு செய்து உள்ளது. Global fixed median speeds-ல் சிங்கப்பூர் முதலாவது இடத்தில் உள்ளது.

இருப்பினும் இந்தியாவில் மொபைல் நெட் ஸ்பீடின் தாமதம் 36 மில்லி விநாடிகள் (ms) என்று Ookla தரவு காட்டுகிறது. இது உலகளாவிய சராசரியான 29ms ஐ விடச் சற்று அதிகமாக இருந்தது. ஃபிக்ஸ்டு பிராட்பேண்டில், உலகளாவிய சராசரியான 10ms உடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தாமதம் 7ms மட்டுமே என்றும் Ookla-வின் அறிக்கை கூறுகிறது.

Also Read : Flipkart Big Billion Day Sale | ஸ்மார்ட் போன் வாங்க சரியான நேரம்.. ஆஃபர்களை குவித்த பிளிப்கார்ட்

ஃபிக்ஸ்டு பிராட்பேண்ட் டவுன்லோட் ஸ்பீடில் சீனா (178.73Mbps) மற்றும் அமெரிக்கா (167.36Mbps) முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. மொபைல் பிராட்பேண்ட் ஸ்பீடில் சீனா ஒன்பதாவது இடத்தையும், அமெரிக்கா 24-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதனிடையே இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) மற்றும் Kantar ஆகியவற்றின் அறிக்கையின்படி, இந்தியாவில் 692 மில்லியன் செயலில் உள்ள இன்டர்நெட் யூஸர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 900 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Janvi
First published:

Tags: Hi-speed internet, Internet