சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்காவை பின்தள்ளிய இந்தியா..!

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜியோமி நிறுவனத்தின் வளர்ச்சி 15 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்காவை பின்தள்ளிய இந்தியா..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 27, 2020, 1:02 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் மிகப்பெரும் ஸ்மார்ட்போன் சந்தை என்ற சாதனையைப் படைத்துள்ளது இந்தியா.

முதலிடத்தில் சீனாவும் இரண்டாமிடத்தில் இந்தியாவும் உள்ளது. முதன்முறையாக இரண்டாம் இடத்திலிருந்த அமெரிக்காவை வீழ்த்தி அந்த இடத்தை இந்தியா எட்டியுள்ளது. 2019-ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை உடன் 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

தொடர்ந்து முதலிடத்தில் ஜியோமி நிறுவனம் உள்ளது. 2019-ம் ஆண்டின் ஆய்வின் அடிப்படையில் மொத்த சந்தை மதிப்பில் 28 சதவிகித பங்கை ஜியோமி நிறுவனம் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் நிறுவனமும் மூன்றாம் இடத்தில் விவோ நிறுவனமும் உள்ளன. சாம்சங் சந்தைப் பங்கு 21 சதவிகிதம் மற்றும் விவோ நிறுவனத்தின் பங்கு 16 சதவிகிதமாகவும் உள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளில் ஜியோமி நிறுவனத்தின் வளர்ச்சி 15 மடங்கு அதிகரித்துள்ளதாம். அதே வேளையில் விவோ நிறுவனம் 24 மடங்கு வளர்ச்சியும் ஒன்ப்ளஸ் 18 சதவிகித வளர்ச்சியும் பெற்றுள்ளன.

மேலும் பார்க்க: இனி ஜிபிஎஸ் தேவையில்லை!- இந்தியாவுக்கென பிரத்யேகமாக இஸ்ரோ வெளியிட்ட NavIC சேவை!
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading