நீங்க சொன்னால் மட்டும் போதும்! இந்தியாவில் மட்டும் அறிமுகமானது அலெக்சா அமேசான் பே

பேடிஎம், போன்பே, கூகுள்பே, வாட்ஸ்அப் பே என அத்தனை டிஜிட்டல் வாலெட் முறைகளுக்கும் அமேசான் பே போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

நீங்க சொன்னால் மட்டும் போதும்! இந்தியாவில் மட்டும் அறிமுகமானது அலெக்சா அமேசான் பே
அமேசான் பே அலெக்ஸா
  • News18
  • Last Updated: October 17, 2019, 6:35 PM IST
  • Share this:
இந்தியாவுக்கு மட்டும் அமேசான் பே மற்றும் அலெக்சா பேமன்ட் முறையை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் பே மொபைல் வாலெட் மூலம் பயனாளர்கள் இனி பணப்பரிவர்த்தனையைச் செய்ய முடியும். அமேசான் அலெக்ஸா பேமன்ட் முறையும் செயல்பாட்டுக்கு வந்திருப்பதால், நீங்கள் அலெக்ஸாவிடம் சொன்னால் போதும். உங்கள் மொபைல் கட்டணம், இன்டெர்நெட் கட்டணம் என அத்தனையையும் ஆன்லைனிலேயே அலெக்ஸா செலுத்திவிடும்.

ஆக, அலெக்ஸா உங்களது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், எக்கோ ஸ்மார்ட், ஸ்மார்ட் ஸ்பீக்கர் என எதனுடன் இணைக்கப்பட்டாலும் உங்களால் அமேசான் பே சேவையைப் பயன்படுத்த முடியும். அமேசானின் இத்தகைய அப்டேட் ஆன சேவை இந்தியாவில் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது.


அமேசான் பே மூலம் மின் கட்டணம், மொபைல் கட்டணம், நீர், கேஸ், ப்ராட்பேண்ட், டிடிஹெச் கட்டணம் என அத்தனையும் செலுத்த முடியும். அலெக்ஸா சேவைப் பிரிவு இந்தியத் தலைவர் புனீஷ் குமார் கூறுகையில், “அலெக்ஸா உடனான அமேசான் பே சேவை வாடிக்கையாளர்களின் நேரம் மற்றும் அலைச்சலை குறைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேடிஎம், போன்பே, கூகுள்பே, வாட்ஸ்அப் பே என அத்தனை டிஜிட்டல் வாலெட் முறைகளுக்கும் அமேசான் பே போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் நிற்கவில்லையா..?- ’இந்த’ கூகுள் சேவைதான் காரணமாய் இருக்கலாம்!கொடைக்கானலில் மூடப்படும் சுற்றுலாத் தளங்கள்!
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading