சமீப காலங்களில் முன்னர் எப்போதும் ஒருவர் இல்லாத அளவிற்கு வீடியோ கேமிங் துறையில் இந்தியாவின் பங்கு மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. முக்கியமாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் கேமிங் சந்தையின் வளர்ச்சி ஆச்சரியப்பட தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது 396.4 மில்லியன் கேமர்களுடன் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கேமிங் சந்தையை கொண்டுள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உதாரணத்திற்கு கடந்த கொரோனா தொற்று லாக்டவுன் சமயங்களில் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூபிலும் மற்ற இதர சமூக வலைத்தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்து பலர் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை அள்ளி வந்தனர். இதை கண்ட பலரும் தங்களுக்கென புதிய சேனல்களை ஆரம்பித்து தங்களுடைய விளையாட்டு திறமையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் இந்திய நாட்டில் இருந்து பல இந்தியர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது 50.2% கேமர்களுடன் ஆசியாவின் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று நிக்கோ பாட்னர்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.மேலும் இந்தியாவில் கேமிங் துறைக்கான சந்தையானது அடுத்த ஐந்து வருடத்தில் 21% வரை வருவாய் ஈட்ட கூடும் என்றும் மிக அதிகமாக வளர்ந்து வரும் துறைகளில் கேமிங் துறையும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோ பார்ட்னர்சின் ஏசியா 10 பி.சி மற்றும் மொபைல் கேம் சந்தையானது 2020ஆம் ஆண்டில் 35.9 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், 2026 ஆம் ஆண்டில் இதன் வருவாய் 41.4 பில்லியன் டாலராக பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : இனி இஷ்டத்திற்கு ரிவ்யூஸ்போட முடியாது.! போலி ரிவ்யூஸ்களை தடுக்க அரசு வைத்த செக்..!
“கேமிங் மூலம் கிடைக்கும் வருவாயை விட, இந்தியாவில் கேமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும், நிகோ பார்ட்னர்ஸின் ஆசியா-10 பி.சி மற்றும் மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 2022- ல் 788.7 மில்லியன் ஆக இருக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டு வாக்கில் 1.06 பில்லியன் என்ற எண்ணிக்கையை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை கேமிங் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளாக உள்ளன. ஜப்பான் மற்றும் கொரியா 77 சதவீத வருவாயுடன் கேமிங் துறையில் முன்னிலை வகிக்கும் நாடாக இருந்து வருகின்றன. மேலும் உலகளவில் நடக்கும் பல கேமிங் போட்டிகளிலும் ஜப்பானியர்களும் கொரியாவை சேர்ந்தவர்களும் தான் அதிக வெற்றிகளை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வரிசையில் இந்தியாவை சேர்ந்த கேமர்கள் பலவும் போட்டி போட்டு கொண்டு தங்களை நிரூபிக்க முயற்சிகளை செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online, Technology, Video Games