Home /News /technology /

உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம்

உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம்

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது வெளியான 2022 உலகளாவிய மொபைல் டேட்டாவின் விலை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    வளர்ந்துவரும் இளைய தலைமுறையின் செய்திகள், தொலைதொடர்பு மற்றும் பல வகையான செயல்பாடுகளிலும் மொபைல் டேட்டா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நம் மொபைல் மூலமாக நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பல நிகழ்வுகளை அறிந்துகொள்ள இது உதவுகிறது. தற்போது வெளியான 2022 உலகளாவிய மொபைல் டேட்டாவின் விலை பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது உலகநாடுகளில் கிட்டத்தட்ட 233 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த 1ஜிபி மொபைல் டேட்டாவின் விலையை கணக்கிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதி தான் இது.

    இந்த பட்டியலில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது.இந்த நாட்டில் ஒரு ஜிபிக்கு $0.04 என்றும் அதாவது இந்திய மதிப்பில் இது தோராயமாக 3 ரூபாய் என்ற குறைந்த விலையிலும் மற்றொருபுறம் செயின்ட் ஹெலினா(Saint Helena) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பிரிட்டிஷ் பகுதி - $41.06 என்றும் இது இந்திய மதிப்பில் ரூ. 3,500 விலையில் மிகவும் விலை உயர்ந்த டேட்டா என்று பட்டியலின் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வட அமெரிக்காவில் மொபைல் டேட்டாவின் மதிப்பு $4.98 என்றும் இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 400 எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த உலகளாவிய மொபைல் டேட்டா விலை 2022 பட்டியலானது விலை ஒப்பீட்டு தளமான Cable.co.uk ஆல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இஸ்ரேல், இத்தாலி, சான் மரினோ, பிஜி மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளும் மொபைல் டேட்டாவிற்கு குறைவான கட்டணம் செலுத்தும் முதல் ஐந்து மலிவான நாடுகள் என்று கூறப்படுகிறது. இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை $0.17, இது நம் இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 14 ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

    இந்தியாவின் மக்கள்தொகை பெரிதும் மொபைல் டேட்டாவையே நம்பியியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் இதன் தேவை அதிகரிப்பதால் டேட்டா நெட்வெர்க்குகளுக்கிடையே போட்டி நடைபெறுவதோடு, குறைவான விலைகளை வழங்கும் நிலையும் உருவாகிறது. மறுபுறம், இஸ்ரேல், உலகளாவிய 5G தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இது விலை நிர்ணயத்திலும் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என்றும் சொல்லலாம்.

    Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்

    இந்த பட்டியலின்படி, செயிண்ட் ஹெலினா (Saint Helena), பால்க்லாந்து தீவுகள்(Falkland Islands) , சாவோ டோம் (São Tomé) மற்றும் Príncipe, டோகெலாவ் (Tokelau) மற்றும் யேமன்(Yemen) ஆகிய நாடுகள் மொபைல் டேட்டாவை வாங்குவதில் அதிகம் செலவாகும் ஐந்து நாடுகளாகவும், இந்த ஐந்தில் நான்கு நாடுகள் தீவுகள் மற்றும் இரண்டு நாடுகள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பட்டியலில் 13 உலகளாவிய பிராந்தியங்களில், சப்-சஹாரா ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa ) சராசரியாக $4.47 அதாவது இந்திய விலையில் தோராயமாக ரூ. 400 என்ற விலை மதிப்புடன் இரண்டாவது மிகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது,மேலும் வட அமெரிக்கா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா சராசரியாக $1.05 இது தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 80 எனவும் கூறப்படுகிறது.

    சிறந்த உள்கட்டமைப்பு, அதிக நம்பகத்தன்மை, சிறிய நுகர்வு மற்றும் பணக்கார பொருளாதாரம் ஆகியவையே முக்கிய நாடுகளின் விலையிலுள்ள வேறுபாட்டிற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    மலிவான நாடுகள் இந்த பட்டியலில் சிறந்த உள்கட்டமைப்பு அல்லது கனமான ரிலையன்ஸ் ஆர்க்கிடைப்களின் கீழ் வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம், மிகவும் விலையுயர்ந்த நாடுகளில் அதிகமான வளர்ச்சி மற்றும் அதீத உள்கட்டமைப்பு உள்ளதாகவும்,இறுதியில், பணக்கார பொருளாதாரங்களில் விலை நிர்ணயத்தின் தரவுகள் உலகளாவிய சராசரியை நோக்கி சாய்வதாகவும் அவர்கள் கூறினார்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: 5G technology, Mobile Data

    அடுத்த செய்தி