முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்டில் சீனாவை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியா.!

ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்டில் சீனாவை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியா.!

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

Indian brand Smartwatch | கடந்த ஜூன் காலாண்டில் முதல் முறையாக சீனாவை விஞ்சி உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்வாட்ச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவிட்-19 தொற்றுக்கு பிறகு மக்கள் தங்கள் சுகாதார நலனில் அதிக அக்கறையுடன் இருப்பதற்கு மத்தியில் நாட்டின் ஸ்மார்ட்வாட்ச் சந்தை ஆண்டுக்கு ஆண்டு (Year-over-year) 347%-க்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாகவும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்வாட்ச் சந்தையாக மாறியுள்ளதாகவும் Counterpoint Research-ன் ஆய்வறிக்கை கூறி இருக்கிறது.

அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச்சின் உலகளாவிய சந்தை ஆண்டுக்கு 13% மட்டுமே வளர்ந்துள்ளதாக UK-வை தளமாக கொண்ட மார்க்கெட் ரிசர்ச் நிறுவனமான Counterpoint Research தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கைபடி, Fire-Boltt மற்றும் Noise போன்ற இந்திய உள்நாட்டு பிராண்டுகள் குளோபல் மார்க்கெட் ஷேரில் முதல் இடத்தை பிடித்துள்ளன. மேலும் இந்த பிராண்டுகள் முதல் முறையாக உலகின் முதல் ஐந்து ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Noise நிறுவனம் ஏற்றுமதியில் 298% YoYஅதிகரிப்பை பதிவு செய்தது மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மார்க்கெட்டில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இடையிலும் Noise இந்தியாவில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. அதே நேரத்தில் Fire-Boltt முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று Counterpoint-ன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே மிகப்பெரிய ஸ்மார்ட்வாட்ச் மார்கெட்டாக 26% ஏற்றுமதிகளை கொண்ட வட அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜூன் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகியவை முறையே உலக சந்தையில் 22% மற்றும் 21% பங்குகளை பெற்றுள்ளன. முந்தைய காலாண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனா இடையே கோவிட்-19 காரணமாக போடப்பட்ட லாக்டவுன்கள் மற்றும் எதிர்மறை பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக நுகர்வோர் தேவை சுருங்கியதால் அதன் ஏற்றுமதியில் Year-over-year 10% குறைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

Also Read : சீன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை; சீனாவின் தரப்பில் விளக்கம்

Huawei, imoo மற்றும் Amazfit போன்ற முக்கிய சீன பிராண்டுகள் மட்டுப்படுத்தப்பட்ட YOY வளர்ச்சி அல்லது சரிவை கண்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முந்தைய காலாண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த ஐரோப்பா, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக 13% YOY வீழ்ச்சியுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜூன் காலாண்டில் இந்திய சந்தையில் இருந்து ஷிப்பிங் செய்யப்பட்ட சுமார் 30% மாடல்கள் 50 டாலருக்கும் குறைவாக விற்கப்பட்டன, மேலும் நாட்டின் முக்கிய உள்ளூர் பிராண்டுகள் மலிவு விலை மாடல்களை அறிமுகப்படுத்தியது நுகர்வோரிடையே ஸ்மார்ட்வாட்ச் வாங்குவதற்கு இருந்த தயக்கத்தை நீக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Also Read : ரூ.15,000-க்கு கீழ் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமா? இதோ லிஸ்ட்

பிரபல நிறுவனங்கள் என்று பார்க்கும் போது இரண்டாம் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் ஆப்பிளின் ஏற்றுமதி 8% அதிகரித்து, உலகளவில் இந்த காலாண்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. 40% வளர்ச்சியுடன் சாம்சங் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதன் வளர்ச்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

First published:

Tags: China, India, Smart watch