சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 232 செயலிகளை தடை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்தியாவில் எண்ணிலடங்கா சூதாட்ட செயலிகளும் கடன் அளிக்கும் செயலிகளும் செயல்பாட்டில் உள்ளன. சீனாவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் இந்த செயலிகளுக்கு இந்தியர்கள் தலைமை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடன் தேவையிருக்கும் மக்களை குறி வைத்து அவர்களை கடன் பெற வைத்து பின்னர் அதிக வட்டியை செலுத்த நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
செயலி மூலம் கடன் பெறும் நபர் ஒருவர் ஆண்டுக்கு 3000 சதவிகிதம் வட்டி கட்டுவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன
கடன் வாங்கியவர்களால் வட்டி செலுத்த இயலாத பட்சத்தில் அவர்களை மிரட்டுவதாகவும், அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக எச்சரிக்கை விடுப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதன் காரணமாக தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிஷா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்கொலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இம்மாநிலங்கள் மற்றும் மத்திய புலனாய்வு துறைகள் கடன் வழங்கும் செயலிககளையும் சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு, 28 சீன கடன் வழங்கும் செயலிகளை மத்திய உள்துறை கண்காணிக்க தொடங்கியது. இதன் முடிவில் 94 செயலிகள் e store களில் கிடைப்பததாகவும் மற்றவை மூன்றாவது நபரின் தொடர்பில் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் தடை செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு உள்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் இச்செயலிகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சுற்றறிக்கை விடுத்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் இச்செயலிகளை விளப்பரப்படுத்துவது சட்ட விரோதம் என கூறியுள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்கமைப்பு சட்டம் 1995 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021 ஆகிய சட்டங்களுக்கு எதிரானது என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ban, China Apps, India, India vs China