ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?

5G மொபைல் டேட்டா... எதன் வேகம் அதிகம்? ஏர்டெல்-லா அல்லது ஜியோ-வா.?

மாதிரி படம்

மாதிரி படம்

ஏர்டெல் நிறுவனம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நகரங்களிலும், ஜியோ நிறுவனம் 4 நகரங்களிலும் பப்ளிக் பீட்டா டெஸ்டிங்கின் ஒரு பகுதியாக தங்கள் 5G நெட்வொர்க்குகளை டெஸ்ட் செய்து வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

  இதனை அடுத்து ஏர்டெல் நிறுவனம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நகரங்களிலும், ஜியோ நிறுவனம் 4 நகரங்களிலும் பப்ளிக் பீட்டா டெஸ்டிங்கின் ஒரு பகுதியாக தங்கள் 5G நெட்வொர்க்குகளை டெஸ்ட் செய்து வருகின்றன. ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய போது, ​​இந்திய தொலைத்தொடர்புத் துறையை அதிர வைத்தது.

  இந்நிலையில் ஜியோவின் 5G பீட்டா சோதனை “Jio True 5G for All” என்ற பெயரில் கடந்த அக்டோபர் 5 தசராவின் போது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி உட்பட 4 இந்திய நகரங்களில் தொடங்கப்பட்டது. உண்மையான 5G ஸ்பீடை யூஸர்களுக்கு அளிக்கும் பொருட்டு அதன் தற்போதைய LTE நெட்வொர்க்கிற்கு பதிலாக ஒரு 5G ஸ்டாண்டலோன் (5G Standalone) நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.

  ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே தற்போது நாட்டில் 5G சேவை வழங்கும் டெலிகாம் ஆபரேட்டராக இருப்பதால், பெரும்பாலான நகரங்களில் ஒட்டுமொத்த வேகத்தில் மிகப்பெரிய ஊக்கத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது.

  Read More: டயர் 2 நகரங்களில் இந்த பொருட்களை தான் அதிகம் வாங்குகிறார்கள் - அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை!

   ஜியோவின் சராசரி டவுன்லோட் ஸ்பீட் ஏர்டெல் நெட்வொர்க்கை விட மிக அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாட்டில் 5G நெட்வொர்க் சோதனையில் டவுன்லோட் ஸ்பீட் 500 Mbps-ஐ எட்டியுள்ளது.

  இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டெல்லியில் 598.58 Mbps உடன் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் போட்டி நிறுவனமான ஏர்டெல் டெல்லி நகரில் 197.98 Mbps-ஐ எட்டியுள்ளதாக இன்டர்நெட் ஸ்பீட் டெஸ்ட்டிங் நிறுவனமான Ookla-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

  இந்த நெட்வொர்க்குகள் தற்போது கமர்ஷியல் ஸ்டேஜில் நுழைந்துள்ளதால் இந்த வேகம் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக Ookla-வின் முதன்மை தொழில் ஆய்வாளர் சில்வியா கூறி இருக்கிறார்.

  தொடர்ந்து பேசிய இவர் கடந்த ஜூன் 2022 முதல் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசி உட்பட நான்கு பெருநகரங்களில் 5G டவுன்லோட் ஸ்பீடை ரெக்கார்ட் செய்ததாக கூறினார்.

  மும்பையை பொறுத்த வரை ஜியோவை விட ஏர்டெல் பின்தங்கியதாகவும் ஏர்டெல்லின் சராசரி டவுன்லோட் ஸ்பீட்  271.07 Mbps-ஆக இருந்த அதே நேரம் ஜியோவின் ஸ்பீட் 515.38 Mbps-ஆக இருந்தது. ஆனால் இரு நிறுவனங்களின் ஸ்பீட் கொல்கத்தாவில் மிகவும் மாறுபட்டது என்று குறிப்பிட்டார்.

  இங்கே ஏர்டெல்லின் சராசரி டவுன்லோட் ஸ்பீட் 33.83 Mbps-ஆக இருந்தது, அதே நேரம் ஜியோவின் ஸ்பீட் 482.02 Mbps-ஆக இருந்தது. எனினும் வாரணாசியை பொறுத்த வரை ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ஸ்பீட் ஓரளவு நெருக்கமாக இருந்தன என்றார். Ookla-வின் பகுப்பாய்வு, ஜியோவின் 5G செயல்திறன் அது பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரம் பேண்டைப் பொறுத்தது என்பதைக் காட்டுகிறது.

  Read More: துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!

  மொத்தத்தில் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஜியோவின் சராசரி 5G டவுன்லோட் ஸ்பீட் அதிகமாக உள்ளது, அதேசமயம் வாரணாசியில் ஏர்டெல் 5G ஜியோவின் ஸ்பீடிற்கு சற்று நெருக்கத்தில் வந்துள்ளது. இதற்கு காரணம் மேலே குறிப்பிட்டது போல ஜியோ ஒரு தனியான 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதாக இருக்கிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: 5G technology, Airtel, Jio