ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சென்னையில் 5G சேவை தொடக்கம் - உங்கள் ஸ்மார்ட்போனில் அதிவேக 5G சேவையைப் பெறமுடியுமா?

சென்னையில் 5G சேவை தொடக்கம் - உங்கள் ஸ்மார்ட்போனில் அதிவேக 5G சேவையைப் பெறமுடியுமா?

இந்தியாவின் இன்று முதல் 5G சேவை

இந்தியாவின் இன்று முதல் 5G சேவை

5G சேவையை உங்கள் ஸ்மாட்போனில் எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் 5G அதிவேக இணையச் சேவையை நீங்கள் பயண்படுத்தும் ஸ்மாட்போன் தாங்குமா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவின் இன்று முதல் 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது. இணையச் சேவையில் இதுவரை இல்லாத ஒரு மிக அதிவேக சேவையாக 5G இந்தியாவில் முதற்கட்டமாகச் சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில் 5G சேவையை உங்கள் ஸ்மாட்போனில் எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் 5G அதிவேக இணையச் சேவையை நீங்கள் பயண்படுத்தும் ஸ்மாட்போனுக்கு பொருந்துமா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

  இந்தியாவில் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன், ஐடியா மற்றும் ஏர்டல் நிறுவனங்கள் இந்தியாவின் தொலைத்தொடர்பு வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்று 5G சேவை தொடங்கியுள்ளனர்.

  5Gயின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:

  5G சேவை முந்தைய 4G சேவை காட்டிலும் 10 மடங்கு அதிவேகமாகச் செயல்படும். இதனால் இணைய வழி சேவைகளை மிக விரைவில் நம்மால் பெறமுடியும்.

  மேற்கு பகுதி நாடுகளில் 5G சேவை மீடியம் அலை கற்றலில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த சேவை குறைந்த அலை கற்றலில் Sub-6GHz 5G சரகமில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இணையச் சேவை எந்த வித தடங்களும் இன்றி நெட்வர்க் டவர்களை சென்றடைந்து நீண்ட தொலைவிற்குத் தங்கு தடையின்றி இணையச் சேவையை வழங்க முடியும்.

  மீடியம் அலை கற்றலில் (mmWave5G band) வழங்கும் சேவைகளை அதிவேகமாக இருப்பினும் மரங்கள், மலைகள், கதவுகள் போன்றவை அலை வரிசையைப் பாதிக்கும். அதனால் இணைய தொடர்புக்காக போனை டவர் அருகில் கொண்டு செல்வது தேவைப்படும். அதனைத் தவிர்க்கும் வண்ணம் இந்தியாவில் குறைந்த அலை கற்றலில் 5G சேவை வழங்கப்படவுள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் 5G சேவையை வழங்கும் விதமாக ஐந்து முக்கிய அலை கற்றலை பெற்றுள்ளனர். அவை 700MHz (n28), 800MHz(n5), 1800MHz (n3), 3300MHz(n78) மற்றும் 26GHz (n258).

  மேலும் ஏர்டல் நிறுவனம் ஐந்து அலை கற்றலை பெற்றுள்ளனர். அவை 900 MHz (n8), 1800 MHz, 2100MHz(n1), 3300 MHz(n78) மற்றும் 26 GHz (n258). வோடஃபோன் ஐடியா 3300MHz (n78) மற்றும் 26GHz (n258) என்று இரண்டு அலை கற்றலை பெற்றுள்ளனர்.

  உங்கள் ஸ்மார்ட்போனில் அதிவேக 5G சேவையைப் பெறமுடியுமா?

  நீங்கள் உபயோகப்படுத்தும் ஸ்மார்போன் n8, n28, n1, n78, n258 என்ற அலைவரிசையில் செயல்படும் என்றால் நீங்கள் தாராளமாக 5G சேவையைப் பெறமுடியும். தற்போது இந்தியாவில் 5G ஸ்மார்போன்களின் விற்பனை தொடங்கிவிட்ட நிலையில் அதிவேக இணையச் சேவையை 1Gbpsயில் இருந்து 10Gbpsவரையில் பெறமுடியும்.

  5G சேவையைப் பெற புதிய சிம் கார்டு தேவையா?

  இந்தியாவில் 4G அறிமுகமானபோது பழைய சிம்களை மாற்றி. புதிய 4G அவசியம் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் 5G தொழில்நுட்பதுடன் ஸ்மார்போன்கள் உபயோகத்திற்கு வந்துவிட்ட காரணத்தினால் 4G-LTE சிம் கார்டை ஏற்கும் ஸ்மார்போன்களில் n8, n28, n1, n78 மற்றும் n258 அலைவரிசை இருந்தால் அவையால் 5G சேவையைப் பெறமுடியும். 4G-LTE சிம் மூலமாகவே

  5ஜி செல்லுலார் டவர்களில் தொடர்பு இணைக்கப்பட்டு 5G இயங்கும்.

  Also Read : PC-க்களுக்கான உலகின் முதல் Slidable Display-வை வெளிப்படுத்திய சாம்சங்.!

  உங்கள் போன் பேட்டரி 5Gயில் அதிவேக இணைப்பைத் தாங்குமா?

  சாதாரணமாகவே இணையம் உபயோகிக்கும் போது போன் பேட்டரி குறையத் தொடங்கிவிடும். இந்த நிலையில் அதிவேகமாக இணையம் போனில் உபயோகிக்கும் போது கண்டிப்பாக பேட்டரி விரைவாகக் குறையத் தொடங்கும். போன் பேட்டரி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியமாக உள்ளது.

  மேலும் இதற்கு வேறு வழியாகக் கூடிய விரைவில் வர இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5G யில் இயங்கும் AirFiber Wi-Fi ரூட்டர்- யை (5G-powered AirFiber Wi-Fi router) பயன்படுத்திக்கொள்ளலாம்.

  Published by:Janvi
  First published:

  Tags: 5G technology, Jio, Reliance Jio, Smartphone