அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் OPPO A12

OPPO A12 | ஜூன் 21 க்குள் இந்த ஃபோனை வாங்கினால், உங்களுக்கு 6 மாத கால எக்ஸ்டெண்டட் வாரண்ட்டி கிடைக்கும்.

அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் OPPO A12
OPPO
  • News18
  • Last Updated: June 10, 2020, 10:29 AM IST
  • Share this:
குளோபல் ஸ்மார்ட் டிவைஸ் பிராண்ட் OPPO தனது புதிய A -சீரிஸ் ஸ்மார்ட்போன் OPPO A12 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விற்பனை ஜூன் 10 முதல் தொடங்கும். இந்த ஃபோன் பல அட்டகாசமான சலுகைகளுடன் உங்களுக்கு கிடைக்கும்.  OPPO A12-ன் சில சிறப்பு அம்சங்களைப் பற்றி நாம் மேலும் அறியலாம்.

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:

இந்த ஃபோனில் மாபெரும் 6.22 இன்ச் அளவு வாட்டர் டிராப் ஐ ப்ரொடெக்ஷன் ஸ்கிரீனை பயன்படுத்தப்பட்டுள்ளது, அது 89% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ வழங்குகிறது. இதனுடன், இந்த ஃபோனின் டிஸ்ப்ளெயில் ஒரு ப்ளூலைட் ஃபில்டரை கொண்டுள்ளது, இது பயனரின் கண்களில் அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் அவரது கண்பார்வையையும் பாதுகாக்கிறது. இந்த ஃபோனின் அகலம் 8.3mm மற்றும் எடை வெறும் 165 கிராம். ஒரு கையால் அதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இந்த ஃபோனுடைய மிகவும் கவர்ச்சிகரமான விஷயம் அதன் வடிவமைப்பு. இந்த ஃபோன் 3D டயமண்ட் பிளேஸ் டிசைனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஃபோன் நீல மற்றும் கருப்பு போன்ற அற்புதமான வண்ண காம்பினேஷனில் கிடைக்கிறது.

 ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி:

இந்த ஃபோனில் 4230mAh கொண்ட பெரிய பேட்டரியைப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் உதவியுடன் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை 8 மணி நேரம் தொடர்ந்து பார்க்கலாம், இதன் மூலம் நீங்கள் இசை, கேம்ஸ் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீண்ட நேரம் பேசலாம். இந்த ஃபோனில் ரேம் மற்றும் ரோம் பற்றி குறிப்பிட்டால், இதில் 2 சிறந்த மெமரி வகைகள், 3GB + 32GB மற்றும் மற்றொரு 4GB + 64GB ஆகியவற்றில் கிடைக்கும். உங்கள் மறக்கமுடியாத தருணங்களை பாதுகாக்க விரும்புகிறீர்களா அல்லது உங்கள் கேமிங் அனுபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய விரும்பினாலும், இந்த ஃபோனில் கொடுக்கப்பட்ட மூன்று கார்ட் ஸ்லாட்டின் உதவியுடன், மெமரியை 256GB வரை அதிகரிக்கலாம்.

கேமரா:

இப்போது கேமராவைப் பற்றி பார்க்கலாம், இரட்டை பின்புற கேமரா OPPO A12 இல் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ப்ரைமரி கேமரா 13 MP மற்றும் மற்றொன்று 2 MP ஆகும். இதன் செல்ஃபி கேமரா 5 MP. இதில் 6x ஜூம் மற்றும் பர்ஸ்ட் மோட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு திகைப்பூட்டும் வண்ண பயன்முறையைக் கொண்டுள்ளது, இது பிக்சல் க்ரேட் கலர்-மேப்பிங் அல்கோரிதம் உதவியுடன் குறைந்த ஒளி இடங்களில் கூட சிறந்த படங்களை எடுக்கும் திறன் கொண்டது. அதன் கேமராவில் AI அழகுபடுத்தும் அம்சம் உள்ளது, இது சரியான இயற்கை காட்சிகளை எடுக்க உதவுகிறது.

சிறந்த செக்யூரிட்டி:

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த ஃபோனிலும் நேர்த்தியாக கவனிக்கப்பட்டுள்ளது, பயனரின் சிறந்த அனுபவத்தை மனதில் கொண்டு, OPPO A12 இன் பின்புற பேனலில் ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், AI ஃபேஷியல் அன்லாக் இன் சிறந்த அம்சமும் வழங்கப்பட்டுள்ளது, இது ஃபோனை மிக விரைவாக அன்லாக் செய்ய உதவுகிறது.

விலை பற்றி பேசுகையில், இந்த சிறந்த ஃபோனின் 3GB+ 32GB வேரியண்ட் வெறும் ரூ .9,990 க்கும், 4GB+ 64GB வேரியண்ட் ரூ .11,490 க்கும் கிடைக்கும். இந்த ஃபோனை வாங்குவதன் மூலம் பல சிறந்த சலுகைகளும் பெறுவீர்கள்.

ஜூன் 21 க்குள் இந்த ஃபோனை வாங்கினால், உங்களுக்கு 6 மாத கால எக்ஸ்டெண்டட் வாரண்ட்டி கிடைக்கும். இந்த தொலைபேசியை பாங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டு இ.எம்.ஐ மற்றும் ஃபெடரல் வங்கியின் டெபிட் கார்டு இ.எம்.ஐ ஆகியவற்றிலிருந்து வாங்கும்போது 5% கேஷ்பேக் கிடைக்கும்.

அதே நேரத்தில், கிரெடிட் கார்டு இ.எம்.ஐ மற்றும் டெபிட் கார்டு இ.எம்.ஐ ஆகியவற்றில் 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ. மேலும், பஜாஜ் பின்சர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹோம் கிரெடிட், எச்டிபி ஃபைனான்ஷியல் சேர்விஸ்ஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் பல சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த ஃபோன் உங்கள் பணத்திற்கு மதிப்புள்ளது என்பதை நாம் கூறலாம், மேலும் இந்த ரேஞ்சில் கிடைக்கும் ஸ்மார்ட்போனைப் பற்றி நாம் பேசினால், அதன் சிறந்த அம்சங்கள் அதை சிறந்ததாக ஆக்குகின்றன.

Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading