Home /News /technology /

உங்கள் மொபைலில் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டிய 5 அரசாங்க சேவைகளை கொண்ட செயலிகள்!

உங்கள் மொபைலில் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டிய 5 அரசாங்க சேவைகளை கொண்ட செயலிகள்!

50 சீன ஆப்களுக்கு தடை

50 சீன ஆப்களுக்கு தடை

வாட்ஸ்அப் முதல் டிவிட்டர் வரை பலவித செயலிகள் இருந்தாலும், பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டவையாக இருக்கிறது

  பொதுவாக நமது மொபைலில் ஏராளமான செயலிகளை வைத்திருப்போம். வாட்ஸ்அப் முதல் டிவிட்டர் வரை பலவித செயலிகள் இருந்தாலும், இவை பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டவையாக இருக்கிறது. அதே போன்று இந்த செயலிகளை தவிர்த்து வேறு எந்த செயலிகளை பற்றியும் நாம் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை. குறிப்பாக அரசாங்க சேவைகள் சார்ந்தவற்றை தெரிந்து கொள்ள நாம் கூகுளையே அதிகம் நாடியிருப்போம். ஆனால், இவற்றிற்கென்று தனியாக செயலிகள் உள்ளது. இந்த பதிவில் உங்கள் மொபைலில் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டிய 5 அரசாங்க சேவைகளை கொண்ட செயலிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

  உமாங் ஆப் : யுனிஃபைட் மொபைல் அப்ளிகேஷன் ஃபார் நியூ ஏஜ் கவர்னன்ஸ் (UMANG) என்பது தான் இந்த யுமாங் செயலியின் விரிவாக்கமாகும். இது ஒரு அத்தியாவசிய அரசு சேவைகளை கொண்ட செயலியாகும். மையம், மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளின் சேவைகளை பயனர்கள் பெற இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. PAN கார்டுக்கு விண்ணப்பிக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பற்றி அறிய, தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி அறிய, myPAN - DigiLocker, Pensioners Portal மற்றும் Digi Sevak போன்ற பிரபலமான வாடிக்கையாளர் மைய சேவை தளங்களுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் பயனுள்ள செயலியாக கருதப்படுகிறது.

  சிபிஇசி ஜிஎஸ்டி (CBEC GST) : இந்தச் செயலி வரி செலுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரிக்களை (ஜிஎஸ்டி) செலுத்துவோருக்கு இது அதிகம் பயன்படும். இந்த செயலியை மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம், நிதி அமைச்சகம் ஆகியவை உருவாக்கியுள்ளது. இது ஜிஎஸ்டி தொடர்பான பல தகவல்களை வரி செலுத்துவோருக்கு வழங்குகிறது. ஜிஎஸ்டிக்கு மாறுதல், ஜிஎஸ்டி சட்டங்கள் & விதிகள், புதிய அப்டேட்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என இதில் பல அம்சங்கள் உள்ளன.

  ஆய்கர் சேது : AAYKAR SETU செயலி வருமான வரித் துறையால் (ITD) வரி செலுத்துவோரின் கேள்விகளைத் தீர்க்க உருவாக்கப்பட்டது. இதில் உள்ள நேரடி சாட் வசதி மூலம் பயனர்கள் தங்கள் வரி பற்றிய கேள்விகளையும், சந்தேகங்களையும் தெரிவிக்கலாம். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தல், வரி ரிட்டர்ன் தயாரிப்பாளரைக் கண்டறிதல், டிடிஎஸ் கால்குலேட்டர் மற்றும் பல வருமான வரித் துறையின் சேவைகளையும் இந்த ஆப் வழங்குகிறது.

  தெரியாமல் 'டெலிட்' ஆன வாட்ஸ்அப் மெசேஜை 'ரீஸ்டோர்' செய்வது எப்படி?


  எம்-கவாச் (M-KAVACH) : உங்கள் சாதனங்களை ஹேக்கிங் மற்றும் மால்வேர் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க இந்த செயலி உதவுகிறது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் உங்களின் வைஃபை, புளூடூத், கேமரா மற்றும் மொபைல் டேட்டா போன்றவற்றை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான அச்சுறுத்தல்களை எம்-கவாச் எச்சரிக்கிறது. யூசர் தங்கள் ஃபோன்களில் உள்ள தொடர்புகள் போன்ற தரவை ரிமோட்டாக நீக்கவும், ஃபேக்டரி செட்டிங்சை மீட்டமைக்கவும், லொக்கேஷன் ட்ராக்கிங்கை எளிதாக்கவும் இந்த செயலி அனுமதிக்கிறது.

  பீம் (BHIM) : யுபிஐ (யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்) பணப் பரிமாற்றத்திற்கான மிகவும் வசதியான மற்றும் எளிதான வழியாக இந்த BHIM ஆப் மாறியுள்ளது. யுபிஐ ட்ரான்ஸாக்சனை மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ள அரசாங்கம் உருவாக்கிய செயலி தான் BHIM (பாரத் இன்டெர்பேஸ் ஃபார் மணி) என்பதாகும். இது மொபைல் போன்கள் மூலம் விரைவான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. UPI கட்டண முகவரி, தொலைபேசி எண் அல்லது QR கோடு ஆகியவற்றை பயன்படுத்தி இதன்மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் செய்யலாம்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Application, Mobile phone, Smartphone

  அடுத்த செய்தி