ஹைப்பர் லூப் வடிவமைப்பு போட்டி... சென்னை ஐ ஐ.டி மாணவர்கள் தேர்வு...!

இந்தியா சார்பில் அமெரிக்காவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: March 14, 2019, 4:18 PM IST
ஹைப்பர் லூப் வடிவமைப்பு போட்டி... சென்னை ஐ ஐ.டி மாணவர்கள் தேர்வு...!
ஐ ஐ.டி மாணவர்கள்
news18
Updated: March 14, 2019, 4:18 PM IST
ஹைப்பர் லூப் எனப்படும் புதிய பயண முறை வடிவமைப்பிற்காக அமெரிக்காவின் ஸ்பேஸ் x நிறுவனம் நடத்தும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க சென்னை ஐ ஐ.டி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காற்றில்லா வெற்றிட குழாய்க்குள் மக்கள் பயணிக்கும் கேப்சூல் எனப்படும் உருளை வடிவ வாகனத்திற்கு இடையே காந்த புலத்தினை உருவாக்கி, குழாய் வழியே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விமானத்தை காட்டிலும் அதி வேகத்தில் பயணிக்க வைக்கும் புதிய தொழில்நுட்ப முறையானது ஹைப்பர் லூப் எனப்படும்.

ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் வேகம் 1200 கி.மீட்டர் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் என்பவரின் சிந்தனையில் உதித்ததே ஹைப்பர் லூப் ஆகும்.


சமீபத்தில் ஸ்பேஸ் x ,என்கிற நிறுவனம் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக உலகளவில் நடத்திய முதற்கட்ட போட்டியில் சென்னை ஐ.ஐ.டி மாணவர் குழு தகுதி பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தில்
அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி காட்டும் வகையில் அமெரிக்காவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Loading...

இந்தியா சார்பில் அமெரிக்காவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர் லூப் பயண முறையினை இந்தியாவில் கொண்டுவருவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியிருக்கின்றன இதன்படி மும்பை - புனே இடையே ஹைப்பர்லூப் திட்டத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மகாராஷ்டிரா அரசாங்கம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...