பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்ப
ரேஷன் (பிஎம்சி), பாந்த்ரா மற்றும் தாஹிசர் இடையே உள்ள 25
மழைநீர் வடிகால்களில் இருந்து கசடு மற்றும் கழிவுநீர் கடலில் கலப்பதைத் தடுக்க இந்திய தொழில்நுட்பக் கழகம்-பாம்பேயின் (ஐஐடி-பி) சூழல்-உள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
N-Treat தொழில்நுட்பம் பற்றி…
கழிவு நீர்களை அதன் போக்கிலேயே அதன் பயணத்தின் போதே சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் தான் இது. திரைகள், வாயில்கள், வண்டல் பொறிகள்,தேங்காய் இழைகளின் திரைச்சீலைகள் மற்றும் சோடியம் ஹைபோகுளோரைட்டைப் பயன்படுத்தி வடிகால்களில் கிருமி நீக்கம் செய்யும் கழிவு சுத்திகரிப்புக்கான ஏழு கட்ட செயல்முறைகளை உருவாக்க உள்ளனர்.
டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 2ஆம் தொகுதியை விண்ணில் ஏவிய சீனா!
இது கழிவுநீர் சுத்திகரிப்புக்கான இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழி ஆகும். இது எல்லாமே கழிவுநீர் வரும் வடிகால்களில், வடிகால் குழாய்களில் அமைக்கப்படுவதால் இது சூழல்- உள் முறை என்று சொல்லப்படுகிறது. சுத்திகரிப்பிற்கு என்று தனியாக இடம் ஒதுக்க தேவை இல்லை. இதனால் இடமும் செலவும் குறையும்.
இதுகுறித்து பேசிய மூத்த குடிமை அதிகாரி “பிஎம்சி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க ஐஐடி-பியை அணுகியது. குடிமை அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட சூழல்-உள் முறை செலவு குறைந்ததாகும். ஏனெனில் இதற்கு கைமுறை பம்பிங் தேவையில்லை. இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது. பராமரிப்புக்கு அதிக பணியாளர்கள் தேவையில்லை” என்றார்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை மாதிரிகளை எடுக்க நாசா திட்டம்
மேலும் இந்த திட்டம் அடுத்த ஐந்தரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். முதல் ஆறு மாதங்கள் உபகரணங்களை நிறுவுவதற்கு தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் உபகரணங்களை அகற்ற வேண்டும், வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி ஓட வேண்டும், என்று கூறினார்.
இந்த திட்டத்தில் மொத்த நீளம் 2.9 கிமீ நீளம் கொண்ட 25 வடிகாலில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,11,150 கிலோ லிட்டர் தண்ணீர் பாய்ச்சலை சமாளிக்கும் தன்மை உருவாக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.