Home /News /technology /

சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

எதிர்காலத்தில், ஸ்டெம் செல்களை நிராகரிப்பதற்கு பதிலாக, மருத்துவர்கள் அவற்றை புத்துயிர் பெறவும், உடலை மீண்டும் உருவாக்கவும் பயன்படுத்த முடியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் லிம்போமா மற்றும் லுகேமியா போன்ற உயிர்காக்கும் ஸ்டெம் செல்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?  தற்போதுள்ள குழந்தையின் தொப்புள் கொடியில் இரத்தத்தை பெற்றோர்கள் சேமித்து வைக்க முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கர்ப்பகால நீரிழிவு நோயால் கர்ப்பம் பாதிக்கப்பட்டால், தொப்புள் கொடியின் ஸ்டெம் செல்கள் சேதமடைந்து பயனற்றதாகிவிடும். 

இருப்பினும், நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, சேதமடைந்த ஸ்டெம் செல்களை மீட்டெடுக்கவும், மீண்டும் புதிய திசுக்களை வளர்க்கவும் உதவும் ஒரு புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளது. புதிய மூலோபாயத்தின் கீழ், சேதமடைந்த ஒவ்வொரு ஸ்டெம் செல்லுக்கும் ஒரு நானோ துகள்கள் பின்னுதவி வழங்கப்படுகிறது.

ஆய்வின்படி, 150 நானோமீட்டர் விட்டம் கொண்ட ஒவ்வொரு கோள நானோ துகள்களும் மருந்தை சேமித்து மெதுவாக ஸ்டெம் செல்களுக்கு மாற்றும் திறன் கொண்டது.

நோட்ரே டேமில் உள்ள பயோ இன்ஜினியரிங் பட்டதாரி திட்டத்தில் விண்வெளி மற்றும் இயந்திர பொறியியல் உதவி பேராசிரியர் டோனி ஹஞ்சயா-புத்ரா கூறுகையில், “ஒவ்வொரு ஸ்டெம் செல்லும் ஒரு சிப்பாய் போன்றது. இது புத்திசாலித் திறனும் மிகுந்த பயனும் கொண்டுள்ளது. எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது அவற்றுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் பணிபுரியும் ஸ்டெம் செல்கள் காயமடைந்து பலவீனமானவை. அவற்றிற்கு இந்த நானோ துகள்கள் "உறுதியான பேக்பேக் (backpack) " வழங்குவதன் மூலம், அது மீண்டும் திறம்பட செயல்படத் தேவையானதை வழங்கும்.

முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் டிக்டாக் மியூசிக்.!

பின்னர், ஆராய்ச்சியாளர்கள் "பேக்பேக்குகளை" அகற்றி சேதமடைந்த செல்கள் மீது ஒரு சோதனை நடத்தினர். பரிசோதனைக்குப் பிறகு, குறிப்பிட்ட  செல்கள் அபூரண திசுக்களை உருவாக்கியது என்று முடிவு செய்யப்பட்டது. அதேசமயம், "பேக்பேக்குகள்" கொண்ட செல்கள் புதிய இரத்த நாளங்கள் உருவாவதைக் காட்டியது.

ஹன்ஜயா-புத்ரா மற்றும் அவரது குழுவினர் கர்ப்பகால சிக்கல்களான ப்ரீக்ளாம்ப்சியா போன்றவற்றின் போது இந்த அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். "எதிர்காலத்தில், ஸ்டெம் செல்களை நிராகரிப்பதற்கு பதிலாக, மருத்துவர்கள் அவற்றை புத்துயிர் பெறவும், உடலை மீண்டும் உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக, ப்ரீக்ளாம்ப்சியா காரணமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை, முழுமையடையாத நுரையீரலுடன் NICU இல் தங்க வேண்டியிருக்கும். எங்கள் தொழில்நுட்பம் இந்த குழந்தையின் வளர்ச்சி விளைவுகளை மேம்படுத்தும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Research, Stem Cell

அடுத்த செய்தி