இந்த 17 ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருந்தால் டெலிட் செய்துவிடவும்..!

தற்போது இந்த சர்ச்சைக்குரிய செயலிகள் மீது ஆப்பிள் நிறுவனமே நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த 17 ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருந்தால் டெலிட் செய்துவிடவும்..!
அபாயகரமான ஆப்ஸ்
  • News18
  • Last Updated: October 25, 2019, 3:15 PM IST
  • Share this:
பிரச்னைக்குரிய செயலிகள் அதிகரித்து வருவது வழக்கமாகிவிட்டது. ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்களது போனில் இந்த 17 செயலிகள் இருந்தால் அவற்றை உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள்.

மொபைல் பாதுகாப்பு நிறுவனமான வாண்டேரா ஐபோனுக்கு ஒத்துவராத அபாயகரமான 17 செயலிகளைப் பட்டியலிட்டுள்ளது. தேவையில்லாத விளம்பரங்கள் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்க இந்த பிரச்னைக்குரிய செயலிகளை நீங்கள் எப்போது பயன்படுத்தினாலும் தவறான ஒரு நபர் அதன் மூலம் சம்பாத்தித்துக் கொண்டிருப்பார் என எச்சரித்துள்ளது வாண்டேரா.

தற்போது இந்த சர்ச்சைக்குரிய செயலிகள் மீது ஆப்பிள் நிறுவனமே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆடிஓ வாகனத் தகவல் தொடர்பான செயலி, ஈஎம்ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மேனேஜர் - ஸ்மார்ட் ஜிபிஎஸ் ஸ்பீடோமீட்டர், கிரிக் ஒந் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்ஸ், டெய்லி ஃபிட்னெஸ் - யோகா போஸ், எப்ஃஎம் ரேடியோ - இண்டெர்நெட் ரேடியோ, ட்ரெய்ன் தகவல், ப்ளேஸ் ஃபைண்டர், ரமதான் டைம்ஸ் 2019, ரெஸ்டாரண்ட் ஃபைண்டர்- Find Food, BMI Calculator – BMR Calc, Dual Accounts, Video Editor – Mute Video, Islamic World – Qibla and Smart Video Compressor.


இந்த 17 செயலிகளே அபாயகரமானவை ஆகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: புதிய அப்டேட் வெளியிட்ட சாம்சங்... விரல்நுனி சென்சார் ‘பக்’ நீக்கம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading