WhatsApp: வாட்ஸ் அப்பின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா? உங்கள் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?

வாட்ஸ் அப்

நீங்கள் வாட்ஸ்அப்-பின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால் மே 15 காலக்கெடுவுக்கு முன்னதாக உங்கள் அக்கவுண்ட்டை நீக்கிவிட்டு டெலிகிராம் அல்லது சிக்னல் செயலிக்கு மாறலாம்.

  • Share this:
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் ஆப்-ஆக இருந்து வருகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மெசேஜிங் சேவை அதன் பயன்பாட்டின் எளிமைக்காக மிகவும் பிரபலமானது. மேலும் வாட்ஸ் அப் குறித்த பல அற்புதமான அம்சங்களை அந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனிடையே வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கொண்டுவந்தது. இதில் யூசர்களில் தகவல்களை நிறுவனம் கவனித்து தேவையானவற்றை எடுத்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத நிறுவனம், வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்தது. பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த விதிமுறைகளையும் மாற்றங்களையும் ஏற்க வேண்டும். இதன் பொருள் ஒரு பயனர் புதிய மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், அவர்கள் பயன்பாட்டிற்கான அணுகலை இழக்க நேரிடும். இதனால் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத யூசர்கள் வாட்ஸ்அப்- ஆப்பை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டது. இதனால் ஏராளமானோர் சிக்னல், டெலிகிராம் போன்ற இதர செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ஸ்அப் நிறுவனம், யூசர்களின் தகவல்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என அறிவித்தது. மேலும் இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் யூசர்கள் மே 15ம் தேதிக்குள் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு நோட்டிபிகேஷன் செய்து வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத யூசர்கள் விரைவில் வாட்ஸ்அப் சேவையை இழந்து விடுவார்கள். அதாவது உங்கள் வாட்ஸ்அப் கணக்கு நீங்காது ஆனால், நீங்கள் உங்கள் தகவல்களை இழக்க நேரிடும். அதேபோல உங்களால் சாட், கால் செய்ய முடியாது, உங்களுக்கு எந்த நோட்டிபிகேஷனும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் புதிய தனியுரிமை விதிகளை ஏற்க விரும்பவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

நீங்கள் வாட்ஸ்அப்-பின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால் மே 15 காலக்கெடுவுக்கு முன்னதாக உங்கள் அக்கவுண்ட்டை நீக்கிவிட்டு டெலிகிராம் அல்லது சிக்னல் செயலிக்கு மாறலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் யூசராக இருந்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு முன்பு நீங்கள் சில விஷயங்களை செய்வது அவசியம். முதலில் வாட்ஸ்அப் தளத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் முழுமையான கோப்பாக பெற வேண்டும். இதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம் என்பதால் காத்திருக்க வேண்டியது அவசியம்.

இதற்கு உங்கள் வாட்ஸ்அப்-பை திறந்து Settings -> Account சென்று Request Account Info என்பதை கிளிக் செய்து Request என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் தொலைபேசி எண், உங்கள் போனில் உள்ள தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், ஸ்டேட்டஸ், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பெறலாம். இந்த தகவல்கள் ஒரு HTML கோப்பாக உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நீக்க, WhatsApp > Settings > Account > Delete My Account என்பதை கிளிக் செய்து உங்கள் வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை டைப் செய்து டெலிட் செய்யவும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: