ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள ஐபோன் 14 128ஜிபி வேரியண்ட்டின் இந்திய விலை என்பது ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனால் அதை நீங்கள் ரூ.45,590 க்கு வாங்க முடிந்தால் அதிஷ்டம் தானே. இங்கு சொல்லப்போகும் வழிமுறைகளை பின்பற்றினால் ஐபோன் 14 மாடலை அதீத தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்பிளே, 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதே அம்சங்களுடன், ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் பெரிய டிஸ்பிளே, ஐபோன் வரலாற்றில் இதுவரை கண்டிராத 26 மணிநேரம் வரை பயன்படுத்தும் வசதி, விபத்து அலெர்ட் வசதி, செயற்கைகோள் தொடர்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இவ்வளவு ரேட் கம்மியா? ஸ்மார்ட் வாட்ச் விலையை அதிரடியாக குறைத்த ஒன்பிளஸ்!
ஐபோன் 14 128ஜிபி வேரியண்ட்டிற்கு தற்போது பிளிப்கார்ட்டில் 16 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஐபோன் மாடலுக்கு ரூ.12,901 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.66,999 என பட்டியலிடப்பட்டுள்ளது.
Flipkart Axis Bank கார்ட் மூலம் இந்த ஐபோன் 14 மாடலை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3,350 வரை சலுகை கிடைக்கும். இப்போது ஐபோன் 14ஐ ரூ.6,3649 என்ற விலையில் வாங்கலாம். இது கிட்டத்தட்ட ஐபோன் 13 இன் விலை.
நீங்கள் ஐபோன் 14 மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க மற்றொரு வழிமுறை இருக்கிறது. அதுதான் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர். புதிய ஐபோன் 14 ஐ வாங்கும்போது உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து அதில் ரூ.21,400 வரை தள்ளுபடி பெற முடியும். அதன்படி ஐபோன் 14 மாடலை ரூ.45,590 என்ற விலைக்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
நீங்கள் ஐபோன் 14 மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கான சரியான நேரம் இது. அதிகப்படியான தள்ளுபடி விலையில் இப்போதே ஆர்டர் போட்டு ஐபோன் 14 ஐ உங்கள் சொந்தமாக்குங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple iphone, Flipkart, IPhone