சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் மகிழ்ச்சி - முகேஷ் அம்பானி

அமெரிக்காவைச் சேந்த சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் மகிழ்ச்சி - முகேஷ் அம்பானி
சில்வர் லேக் - ஜியோ
  • News18
  • Last Updated: May 4, 2020, 11:26 AM IST
  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் 9.9 சதவிகித பங்குகளை வாங்கியது. இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு சந்தையில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேந்த சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது.


“அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியவற்றில் சில்வர் லேக் மிகவும் மதிக்கப்படும் குரல்களில் ஒன்றாகும். இந்தியன் டிஜிட்டல் சமூகத்தின் மாற்றத்திற்காக  அவர்களின் உலகளாவிய தொழில்நுட்ப உறவுகளின் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

 




First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading