Home /News /technology /

ஹுண்டாய் சான்ட்ரோ இனி விற்பனைக்கு இல்லை: முன்பதிவில் இருந்து நீக்கம்!

ஹுண்டாய் சான்ட்ரோ இனி விற்பனைக்கு இல்லை: முன்பதிவில் இருந்து நீக்கம்!

ஹுண்டாய் சான்ட்ரோ

ஹுண்டாய் சான்ட்ரோ

Hyundai Santro | சான்ட்ரோ காரின் புக்கிங் மற்றும் லிஸ்டிங்கை ஹோண்டா நிறுவனம் நீக்கி விட்டிருந்தாலும் மாடல்களின் விலை இன்னும் இணைய தளத்தில் காணப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய மாடல் கார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பட்ஜெட் முதல் சொகுசு கார்கள் வரை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப கார் உற்பத்தியாளர்கள் பல விதங்களில் பல மாடல்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ஒரு சில கார்கள் கிளாசிக் கார்களாக வாடிக்கையாளர்கள் மனதில் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் ஹுண்டாய் சான்ட்ரோ. ஆனால் கார் டெக்னாலஜி மற்றும் அடுத்தடுத்து தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும் போது தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு சில கார்களின் உற்பத்தி மற்றும் புக்கிங் நிரந்தரமாக தடை செய்யப்பட்டு விடுகிறது. அதில் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடல் கார்களின் புக்கிங்கை நிறுத்தி விட்டது.

இணையதளத்தின் வழியாக கார்களை புக் செய்யும் வசதியை ஹூண்டாய் நிறுவனம் எப்பொழுதோ சேர்த்துள்ளது. தற்போது அந்த ஆப்ஷனில் சான்ட்ரோ மாடல்கள் காணப்படவில்லை. நடுத்தர விலையில் ஒரு அழகான அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட காராக ஹூண்டாய் சான்ட்ரோ பல லட்சம் வாடிக்கையாளர்களின் விருப்பமான காராக இருந்தது. நான்கு வெவ்வேறு விதமான டிரிம்களில், இதன் தொடக்க விலையாக ₹4,80,000 இலிருந்து கிடைத்தது. தற்பொழுது ஹூண்டாய் சான்ட்ரோவின் புக்கிங்கை ஹுண்டாய் நிறுவனம் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.

சான்ட்ரோ காரின் புக்கிங் மற்றும் லிஸ்டிங்கை ஹோண்டா நிறுவனம் நீக்கி விட்டிருந்தாலும் மாடல்களின் விலை இன்னும் இணைய தளத்தில் காணப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சான்ட்ரோ கார்கள் இனி விற்பனை செய்யப் போவதில்லை என்பதை பற்றிய எந்த தகவலும் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்படவில்லை. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்புதான், மாதத்தின் தொடக்கத்தில் ஹூண்டாய் சான்ட்ரோ கார்களின் விலை ₹17,800 வரை அதிகரிக்கப்பட்டது.

சான்ட்ரோ அறிமுகப்படுத்த காலத்தில் இருந்தே மிகப்பெரிய ஹிட்டான மாடலாக பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஆரம்ப லெவல் ஹேட்ச்பேக்காக மீண்டும் தனது ரீ என்ட்ரியை மிகப்பெரிய அளவில் செய்தது. ஹுண்டாய் சான்ரோவில் 1.1 பெட்ரோல் எஞ்சின், 68bhp மற்றும் 99Nm டார்க்குடன் உள்ளது. ஐந்து ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட், மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் என்ஜின் மட்டுமல்லாமல் சிஎன்ஜி மாடலையும், ஐந்து-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஹுண்டாய் நிறுவனம் அளித்திருந்தது. டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், மவுண்ட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி,ரியர் பார்க்கிங் கேமரா என்று மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் ஹூண்டாய் சான்ட்ரோவின் ரீஎன்ட்ரி காணப்பட்டது.

Also see... தூள் கிளப்பும் Harley-Davidson Bikes- விற்பனை அதிகரிக்க காரணம் இதுவா.?

விலை அதிகரிக்கப்பட்ட காரின் விற்பனை ஏன் நிறுத்தப்பட்டது என்பதை பற்றிய எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த மாடலின் டீலர்ஷிப்களும் இனி புக்கிங்கை எடுத்துக் கொள்ளாது என்று கூறப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Car, Hyundai Santro

அடுத்த செய்தி