பொதுவாக நம் ஊரில் முடியை வெட்டினால் அதை குப்பையில் தூக்கி எரிந்து விடுவார்கள் அல்லது அதை சேகரித்து சவுரி முடி செய்து விற்பார்கள். ஆனால் பெல்ஜியத்தில் முடியை வைத்து சுற்றுச்சூலை பாதுகாக்கின்றனராம். அது எப்படி முடியை வைத்து செய்யமுடியும் என்று தானே யோசிக்கிறீர்கள்.. சொல்கிறோம்.
மனிதனின் முடி என்பது நமக்கு ஒரு கூடுதல் வளர்ச்சிதான். நரம்பு, எலும்பு, ரத்தஓட்டம் ஏதும் இல்லாத ஒரு பகுதி. நகத்தை போல இதுவும் வெட்ட வெட்ட வளர்ந்துவிடும். அதனால் இதன் பண்புகள் என்று பலருக்கு தெரிவதில்லை.
ஒரு இழை அதன் சொந்த எடையை விட 10 மில்லியன் மடங்கு வரை தாங்குமாம். மேலும் நமது முடி கொழுப்பு மற்றும் ஹைட்ரோகார்பன்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தான் நம் என்னை தேய்ப்பது உறிஞ்சி மண்டைக்கு செல்கிறது.
மேலும் 95% கெரட்டினால் ஆன முடி இழைகள் அதிக மீள்தன்மை கொண்டது. 1 கிலோகிராம் முடி 7-8 லிட்டர் எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன்களை உறிஞ்சும். இந்த தனித்துவமான பண்பினால் தான் இதை பெல்ஜிய நிறுவனம் இயற்கையை பாதுகாக்க இதை தேர்வு செய்துள்ளது.
டங் டங் எனும் நிறுவனத்தை பேட்ரிக் ஜான்சன் என்பவர் தொடங்கினர். இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான் பெல்ஜியத்தில் உள்ள பெரும்பாலான சலூனைகளில் இருந்து முடியை வாங்கி வந்து அதை மேட்டாக மாற்றுகின்றனர்.
முடியை உயர் அழுத்த இயந்திரத்தின் உதவியோடு சதுர வடிவிலான மேட்டாக மாற்றுகின்றனர். இதை மனிதர்கள் வெளியேற்றிய தண்ணீர் சேமித்த வடிகாலில் பரப்பிவிட்டால் இதன் எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன்களை உறிஞ்சும் தன்மையால் கழிவுநீரில் உள்ள இயற்கையை மாசுபடுத்தும் பொருட்களை உறிஞ்சிவிடலாம்.
கொஞ்சம் தெளிந்த பின் அந்த தண்ணீரை நதியில் கலக்க செய்யலாம் என்று நிறுவனம் தெரிவித்தது. இப்படிதான் மனிதர்கள் தூக்கி வீசும் முடிகளை சமூக அக்கறை உள்ள பொருளாக மாற்றுகின்றனர். இந்த ஐடியா நல்லா இருக்குல்ல மக்களே...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, Hair