இந்தியாவில் வளர மைக்ரோமேக்ஸ் உடன் கூட்டணி அமைத்த ஹூவே..!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹூவே நிறுவனத்துக்கு அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தடையும் செய்துள்ளார்.

இந்தியாவில் வளர மைக்ரோமேக்ஸ் உடன் கூட்டணி அமைத்த ஹூவே..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 26, 2019, 4:24 PM IST
  • Share this:
இந்தியாவில் தனது வணிகத்தைப் பெருக்க மைரோமேக்ஸ் உடன் ஹூவே நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் உலகின் இரண்டாம் பெரும் ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட் ஆன ஹூவே ஆழமான சந்தை வணிகத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. சீன நிறுவனமான ஹூவே-க்கு இந்தியாவுக்கு ஏற்ற திட்ட வழிமுறைகளை மைக்ரோமேக்ஸ் வழங்குமாம்.

இதன் மூலம் இந்திய சந்தைக்கு ஏற்ற சில்லரை வணிகத்தைப் பெருக்க ஹூவே முடிவெடுத்துள்ளது. குறிப்பாக செல்லி, மும்பை, பூனே, சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டேராடூன், கொல்கத்தா மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களை முக்கிய குறிக்கோளாக ஹூவே கொண்டுள்ளதாம்.


இதுவரையில் சில்லரை வணிகர்கள் மூலமாக மட்டுமே ஹூவே விற்பனை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதலாவதாக ஹூவே Y9 ப்ரைம் வெளியீட்டின் மூலமாகவே தனது இந்திய வருகையை ஹூவே அறிவிக்க உள்ளது. ஹூவே Y9 ப்ரைம் பாப்-அப் செல்ஃபி கேமிரா உடனான ஹூவே-வின் முதல் ஸ்மார்ட்ஃபோனாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹூவே நிறுவனத்துக்கு அந்நாட்டில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தடையும் செய்துள்ளார். இதனாலே வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிறது ஹூவே.

மேலும் பார்க்க: மலிவு விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஏற்ற PUBG மொபைல் லைட்..!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்