வோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்!

வோடபோன் ஐடியாவின் 5ஜி தொழில்நுட்ப நெட்வொர் என்பது இந்தியாவின் முதன்மையான செயல்திட்டம் ஆகும்.

வோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 15, 2019, 8:24 PM IST
  • Share this:
இந்தியாவின் முதல் 5ஜி தொழில்நுட்ப சேவை வோடபோன் ஐடியா நிறுவனம் மூலம் நாட்டில் களம் இறக்கப்பட்டுள்ளது.

சீன டெலிகாம் நிறுவனமான ஹூவே இந்தியாவில் முதன்முறையாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வோடபோன் ஐடியா நிறுவன தொழில்நுட்ப தலைவர் விஷாந்த் வோரா கூறுகையில், “எங்களது நெட்வொர்க் திறனை வளர்க்க தொடர்ந்து எதிர்காலத்துக்கான புதிய தலைமுறை மக்களுக்கான தொழில்நுட்பத் தேவையை செயல்படுத்தி வருகிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனையும் உட்புகுத்தி இருப்பது இந்தியாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப அப்டேட் ஆகும். டிஜிட்டல் யுகத்துக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளோம்” என்றுள்ளார்.


வோடபோன் ஐடியாவின் 5ஜி தொழில்நுட்ப நெட்வொர்க் என்பது இந்தியாவின் முதன்மையான செயல்திட்டம் ஆகும். சர்வதேச அளவில் இது மூன்றாம் செயல்பாட்டுத் திட்டம்.

மேலும் பார்க்க: 155-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா- ஜியோ மூலம் சாத்தியமானது!

வீடியோ கால் அசிஸ்டெண்ட் தொழில்நுட்பம்! ஜியோவின் அசத்தல் அறிமுகம்
First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading