• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தொழில்நுட்ப உலகின் அப்டேட்ஸ்: Huawei Band 6, வாட்ஸ்அப் புதிய அம்சம், Realme சலுகைகள்..!

தொழில்நுட்ப உலகின் அப்டேட்ஸ்: Huawei Band 6, வாட்ஸ்அப் புதிய அம்சம், Realme சலுகைகள்..!

Tech Updates

Tech Updates

ஹுவாய் பேண்ட் 6, வாட்ஸ்அப் புதிய அம்சம், குவால்காம் ஸ்மார்ட்போன் மற்றும் பல புதுப்பிப்புகள் பற்றிய தொகுப்பு இங்கே.

  • Share this:
தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய அறிமுகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பழைய அம்சங்கள் புதுப் பொலிவோடு மேம்படுத்தப்படுகின்றன. ஹுவாய் பேண்ட் 6, வாட்ஸ்அப் புதிய அம்சம், குவால்காம் ஸ்மார்ட்போன் மற்றும் பல புதுப்பிப்புகள் பற்றிய தொகுப்பு இங்கே.

இன்று தொழில்நுட்ப உலகில் இது ஒரு சுவாரஸ்யமான நாள். ஒருபுறம், ஹுவாய் நிறுவனம் இந்தியாவில் ஹுவாய் பேண்ட் 6 ஐ அறிமுகப்படுத்தியது. மறுபுறம், வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் அம்சத்தில் புதுப்பிப்புகளை சேர்ப்பதில் முனைப்பாக உள்ளது என்று அறிக்கைகள் விரிவாகக் கூறுகின்றன. இந்த புதிய அம்சம் மூலம், யூசர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் படத்தின் தரத்தைத் தேர்வுசெய்ய முடியும். உங்களிடம் ஹை ரிசல்யூஷன் புகைப்படம் இருந்தாலும், நீங்கள் குறைவான தரத்தில் (ரிசல்யூஷன்) படங்களை மாற்றம் செய்து அனுப்பலாம்.

ஹுவாய் பேண்ட் 6 இந்தியாவில் அறிமுகம் :

ஹுவாய் நிறுவனம்  ஹுவாய் பேண்ட் 6 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது . இது 14 நாள் பேட்டரி ஆயுள் கொண்ட 1.47 இன்ச் AMOLED ஃபுல்வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 11 தொழில்முறை முறைகள் உட்பட 96 ஒர்க்அவுட் முறைகளை ஆதரிக்கிறது. இதனை ஜூலை 12 முதல், பிரத்யேகமாக அமேசானில் வாங்கலாம். இதன் ஆரம்ப விலை ₹ 4,490.

Also Read:  நம்பகமான Meesho App-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? இதோ எளிமையான வழிமுறைகள்!

Google கேலெண்டர் அப்டேட் :

கூகுள் காலண்டரில் புதிய ஆர்எஸ்விபி அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், யூசர்கள் ஒரு மீட்டிங்கில் எவ்வாறு கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்ய உதவுகிறது. நோய்த்தொற்று காலத்தில் சமூக விலகல் கடைப்பிடிப்பது போலவே யூசர்கள் ஒரு மீட்டிங்கில் விர்ச்சுவலாகக் கலந்து கொள்ள தேர்வு செய்யலாம். அல்லது அவர்கள் நேரடியாகவும் கலந்துகொள்ளவும் தேர்வு செய்யலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் இன்சைடர்களுக்காக தொலைபேசி :

குவால்காம் ASUS உடன் இணைந்து ஸ்னாப்டிராகன் இன்சைடர்களுக்காக பிரத்யேக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது . இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC, 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 144Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காமின் விரைவான சார்ஜ் 5.0 ஐ ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. 6 ஜிபி + 512 ஜிபி மாறுபாட்டிற்கான விலை $1,499 ( ₹112,200 தோராயமான விலை).

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

வாட்ஸ்அப் அப்டேட் :

வாட்ஸ்அப் நிறுவனம், படங்களின் தரம் அம்சத்தில் புதிய அப்டேட்களை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த அம்சம் மூலம், யூசர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளும் படங்களை தரத்தை குறைத்து பகிர முடியும். ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் ஆகிய மூன்று விருப்பங்கள் உள்ளன. அதில் இருந்து சிறந்த தரம் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், யூசர்கள் மிக உயர்ந்த தரமான படங்களைப் பகிரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபிளிப்கார்டில் Realme சலுகைகள் :

ஃபிளிப்கார்ட் ஜூலை 10 முதல் ஜூலை 13 வரை எலக்ட்ரானிக் விற்பனையை வழங்குகிறது. இந்த விற்பனையின் போது, Realme தனது ஸ்மார்ட்ஃபோன்களை தள்ளுபடி விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது. Realme X3 SZ ₹ 6,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது மற்றும் Realme 7 ப்ரோ ₹ 4000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: