குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற புதிய மலிவு விலை HP லேப்டாப் அறிமுகம்!

புதிய மலிவு விலை HP லேப்டாப்

என்னதான் மொபைல் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டாலும் சற்று பெரிய ஸ்கிரீனில் வகுப்புகளை கவனிப்பது மாணவர்களின் சிரமத்தை குறைக்கும். படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
HP நிறுவனம் மலிவான விலையில் புதிய லேப்டாப் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் வரும் இந்த லேப்டாப் டச் டிஸ்பிளே அம்சத்துடன் வருவது கூடுதல் சிறப்பு. இதன் பெயர் HP Chromebook 11a ஆகும். கொரோனா தாக்கம் காரணமாக பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கிறது. என்ன தான் மொபைல் மூலம் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டாலும் சற்று பெரிய ஸ்கிரீனில் வகுப்புகளை கவனிப்பது மாணவர்களின் சிரமத்தை குறைக்கும். படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

ஏற்கனவே மாணவர்களுக்கு என்றே HP நிறுவனம் ஏராளமான Chromebook மாடல் லேப்டாப்களை சந்தையில் விற்று வருகிறது. இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் தற்போது பட்ஜெட் விலையில் மற்றுமொரு Chromebook மாடல் லேப்டாப்பை(HP Chromebook 11a) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடல் லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.21,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பை வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் வழியே ஆன்லைனில் வாங்கலாம். இந்த புதிய HP Chromebook 11a ,11.6 அங்குல எச்டி தொடுதிரை அம்சம்(HD touch-screen display) மற்றும் QWERTY கீபோர்ட்டை கொண்டுள்ளது மேலும் மாற்றத்தக்க வடிவ காரணியில் வருகிறது.

குறிப்பாக இந்த லேப்டாப் சிறிய வகுப்பு மாணவர்களை மனதில் வைத்து (2-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீடியா டெக் எம்டி 8183 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. தனது புதிய மலிவு விலை லேப்டாப் பற்றிய செய்தி குறிப்பு ஒன்றில் HP நிறுவனம், " இந்த புதிய Chromebook மாணவர்களை வீட்டில், வகுப்பறையில் மற்றும் கலப்பு முறை கற்றல் சூழல்களில் இணைக்க, அவர்களுக்கு உந்துதலாகவும் மற்றும்ஆக்கப்பூர்வமாகவும் இருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

Also read... Mi Fan Festival 2021 ஆரம்பம் - நம்ப முடியாத விலையில் சியோமி தயாரிப்புகளை வாங்க சிறந்த வாய்ப்பு!

மீடியா டெக் இன்டகிரேடெட் கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் சிபியு மற்றும் ஜி.பீ.யூ கிராபிக்ஸ் ப்ராசஸர்களை கொண்டுள்ளது. யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உடன் ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட Connectivity port-கள் இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் அதிகமான அப்ளிகேஷன்களுக்கான அணுகலை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. HP Chromebook 11a 16 மணிநேரம் நீடித்த பேட்டரி ஆயுளை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எளிதாக நகர்த்தி கொள்ளும் வகையில் 1 கிலோ எடையில், இண்டிகோ ப்ளூ கலரில் மேட் பினிஷ் வடிவமைப்பில் இந்த லேப்டாப் வருகிறது. Chromebook 11a 64 ஜிபி வரை ஸ்டோரேஜ் வழங்குகிறது, மேலும் இதை 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இதனுடன் கொடுக்கப்படும் கூகுள் ஒன் மூலம் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், ஒரு வருடத்திற்கான Google experts access மற்றும் பிற உறுப்பினர் பிரத்தியேக நன்மைகளை பெறலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: