வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நீங்களும் உதவலாம்!

நடிகர் அக்‌ஷய் குமார், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ள இணையதளம் மூலம் நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாம்.

Web Desk | news18
Updated: February 18, 2019, 11:54 AM IST
வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நீங்களும் உதவலாம்!
’பாரத் கீ வீர்’ இணையதளம்
Web Desk | news18
Updated: February 18, 2019, 11:54 AM IST
கடந்த வாரம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பல ஜவான்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சூழலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அரசும் அரசு சாரா பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் மக்களுக்காக நடிகர் அக்‌ஷய் குமார், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ள இணையதளம் மூலம் நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாம்.


’பாரத் கீ வீர்’:

இந்தியாவின் வீர உள்ளங்கள் என்ற ‘பாரத் கீ வீர்’ இணைய தளம் இந்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு நடிகர் அக்‌ஷய் குமார் உருவாக்கியது. இத்தளத்தின் மூலம் மக்கள் தங்கள் நன்கொடைகளை ஆன்லைன் பேமண்ட் ஆக செலுத்த முடியும்.

கீழ்கண்ட தளத்தில் இதனை செய்யலாம்...

Loading...

https://bharatkeveer.gov.in/

பேடிஎம்:

பேடிஎம் ஆப் மூலமாகக் கூட நீங்கள் உதவி செய்ய முடியும். பேடிஎம் தளத்தில் ‘Donation’ டேப் சென்று “CRPF Wives Welfare Association” என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். மொபைல் பயனாளர்கள் ஆப் மூலம் “CRPF Bravehearts” என்ற லிங்க் கொண்டு உதவலாம்.ராணுவ நல உதவி:

"Army Welfare Fund Battle Casualties" payable at New Delhi என்ற முறையில் மக்கள் டிடி எடுத்து ராணுவ நல உதவி வாரியத்துக்கு நேரடியாகவே அனுப்பலாம்.

மேலும் பார்க்க: ராணுவ மரியாதையுடன் சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல் அடக்கம்...
First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...