ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிரடி மாற்றங்கள் – பெண்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரிப்பு

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிரடி மாற்றங்கள் – பெண்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

ரியல் எஸ்டேட் என்றாலே ஆண்கள் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் இந்தியாவில் சமீபத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஒரு சில துறைகள் மட்டும் தான் பெண்கள் வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும் சில துறைகளில் பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதில் எல்லாம் பெண்களே கிடையாது என்ற நிலையெல்லாம் மாறி ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த பெரும்பாலான துறை மற்றும் வேலைகளில் பெண்களும் தற்பொழுது கணிசமான அளவில் பணியாற்றி வருகின்றனர்.

  இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ரியல் எஸ்டேட் துறையைக் கூறலாம். ரியல் எஸ்டேட் என்றாலே ஆண்கள் மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் இந்தியாவில் சமீபத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகின்றன.  பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று கருதப்படும் அளவுக்கு பெண்கள் ரியல் எஸ்டேட் துறையை ஒரு புதிய வடிவத்தில் மாற்றி வருகின்றனர்.

  ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு பெண்கள் ஒரு முக்கியமாக காரணமாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜிடிபி என்று கூறப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு இந்திய ரியல் எஸ்டேட் துறை 6% பங்களிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் அதிக அளவு ஊழியர்களை கொண்டிருக்கும் இரண்டாவது துறையாக ரியல் எஸ்டேட் துறை இருக்கிறது.

  பாரம்பரியமாக பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பணியாற்றும், ஆண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையாக இருந்தது. பெண்கள் வேலை செய்தாலுமே, பெண்கள் இருக்கிறார்களா என்று சந்தேகிக்கும் அளவுக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள் செயலாற்றி வந்திருக்கிறார்கள்.மேலும், வீடு, மனை வாங்கும் விற்கும் அல்லது வீடு சம்பந்தப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும், பெண்கள் எந்த முடிவும் எடுப்பதில்லை அல்லது பெண்களின் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்துள்ளது. தற்போது இதுவும் மாறி வருகிறது.

  ரியல் எஸ்டேட் துறையில் பெண்கள் வேலை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய கருவியாக இருந்து வருகிறார்கள். இத்துறையில், ப்ராப்பர்ட்டி ஆலோசகராக, சேனல் பார்ட்னராக, ரியல் எஸ்டேட் ஏஜென்டாக, ரியல் எஸ்டேட் மல்டிநேஷனல் கம்பெனியின் வளர்ச்சிக்கு பணியாற்றுபவராக, பல விதங்களில் பெண்கள் ரியல் எஸ்டேட் துறையை புதிய உயரத்தை நோக்கி கொண்டு போவதற்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

  பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கியது முதலே, இந்திய ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

  பெண்கள் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

  ரியல் எஸ்டேட் துறையில் பெண்கள் பில்டர்களாக, ஒரு கட்டிடம் அல்லது வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து நிலைகளிலும் ஆதரவாக நின்று செயல்படுகிறார்கள். அதே நேரத்தில் வீடு மனை வாங்குபவர்கள் ஆகவும், புரோக்கர்களாகவும் பெண்கள் முக்கிய முடிவு எடுக்கிறார்கள். இதை தவிர்த்து கன்சல்டன்சி மூலம் ஆலோசகர்களாகவும் செயல்படுகிறார்கள்.

  ஆண்களும் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்; பெண்கள் செய்வதற்கும் ஆண்கள் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்கு சந்தேகம் எழும்பலாம்!பெண்கள் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றுவது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஸ்டார்ட்ஸ்டிக்ஸ் தரவு வெளியாகி உள்ளது.

  Read More: ஒபெக் நாடுகள் எடுத்த முடிவு எதிரொலி : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?!

  • ரியல் எஸ்டேட் துறையில் நுகர்வோருடன் இணைந்து பணியாற்றும் பெண்கள் இந்தத் துறையைப் பற்றிய தெளிவான அணுகுமுறை மற்றும் தன்னம்பிக்கையை நுகர்வோருக்கு ஏற்படுத்துகிறார்கள்.
  • பெண்களுடன் பெண்கள் ஆலோசகராக அல்லது பில்டர்கள் ஆக பணியாற்றும் பொழுது பொறுமையாக இருப்பதாகவும் அவர்கள் அணுகுவதற்கு எளிதாகவும், ஒப்பந்தங்கள் சுலபமாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் தெரிகிறார்கள் என்று பதிவு செய்துள்ளனர்.

  ரியல் எஸ்டேட் துறையில் பெண்கள் பங்களிப்புக்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்

  CREDAI, இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழில்துறையில் அனைத்து பாலினத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்ற வேண்டும் என்பதற்காக மாற்றங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

  சமீப காலமாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிமுறைகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் இதை உறுதி செய்கிறது. ஏனோதானோவென்று இருந்த ரியல் எஸ்டேட் துறையில், ஒரு நேர்த்தியான தொழில்முறை சூழல் உருவாகி இருக்கிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Work, Working women