ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Happy New Year 2022 | வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

Happy New Year 2022 | வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

Happy New Year 2022 | WhatsApp Wishes அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை மெசேஜிங் ஆப் வழியே தெரிவிக்கலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் ஒவ்வொரு பண்டிகை, கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். புத்தாண்டு பலருக்கும் புதிய நம்பிக்கைகளையும், ஊக்கத்தையும் கொடுக்கும். நமக்குப் பிடித்தவர்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பும் போதும் அல்லது பெறும்போதும் மகிழ்ச்சியாக உணர்வோம். கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான முறையில் அவரவர் வசிப்பிடத்திலேயே இருந்து, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை மெசேஜிங் ஆப் வழியே தெரிவிக்கலாம்.

  ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை, தொழில்நுட்பம் பெரிதாக வருவதற்கு முன்னர், வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். தற்பொழுது வாழ்த்து செய்திகள் எல்லாமே டிஜிட்டல் வடிவில் உள்ளன. ஒருவரை தொடர்பு கொள்வதும் எளிதாகி இருக்கிறது. சமீபத்தில் வாழ்த்து செய்திகளை ஸ்டிக்கர்கள் மற்றும் GIF இமேஜ்கள் மூலம் பகிரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், சிலருக்கு ஸ்டிக்கர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியவில்லை. வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ்அப்பில் எவ்வாறு அனுப்புவது என்று இங்கே பார்க்கலாம்.

  வாட்ஸ்அப்பில் ( Whatsapp) புத்தாண்டு ஸ்டிக்கர்களை (New Year 2022 Stickers) அனுப்புவது எப்படி?

  1: உங்கள் மொபைல் போனில் ஸ்டிக்கர் பாக்ஸ்களை டவுன்லோட் செய்யவும்.

  ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஸ்டிக்கர்களை நீங்கள் நேரடியாக உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யலாம். ஏகப்பட்ட ஸ்டிக்கர் பாக்ஸ் அல்லது ஸ்டிக்கர் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது. புத்தாண்டு ஸ்டிக்கர் பாக்ஸ் என்பதை போலே ஸ்டோரில் தேடி டவுன்லோட் செய்யலாம்.

  ஒவ்வொரு செயலியை டவுன்லோட் செய்யும் பொழுது, உங்கள் போனில் சில அம்சங்களுக்கு அக்சஸ் கேட்கும். அதில் மெசேஜிங், கேமரா, ஸ்டோரேஜ் உள்ளிட்டவை அடங்கும். ஸ்டிக்கர் பேக்குகளை அல்லது ஆப்சிற்கு வாட்ஸ்அப் மெசேஜிங் அனுமதி கொடுத்து, அதனை ஆக்டிவேட் செய்யுங்கள்.

  also read : வாட்ஸ்அப்பில் உங்கள் பெயரை மறைப்பது எப்படி?

  2: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவது :

  நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கர் பேக்கில் வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளித்த பிறகு, நீங்கள் தனிநபர் சாட் அல்லது வாட்ஸ்அப் குழுக்களில் ஸ்டிக்கர்களை அனுப்பலாம். நீங்கள் பர்சனல் சாட்டில் அல்லது குரூப் சாட்டில் ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் காண்டாக்ட்டை தேர்வு செய்யவும்.

  யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்த பிறகு, செய்தியை டைப் செய்யும் இடத்தில் இருக்கும் எமோஜி பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். திரையில் கீழ்ப் பகுதியில், வலது பக்கத்தில் ஸ்டிக்கர் தோன்றும். அதில் இருக்கும் ஸ்டிக்கர்களில் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்வு செய்யலாம். தேர்வு செய்த ஸ்டிக்கரை கிளிக் செய்தால், மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் அந்த ஸ்டிக்கர் இடம்பெறும். Send ஐகானை கிளிக் செய்து, ஸ்டிக்கர் வாழ்த்து மெசேஜ் அனுப்பலாம்.

  3: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை சேமிப்பது எப்படி :

  நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை, உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் சேமித்து வைக்கலாம். நீங்கள் எந்த ஸ்டிக்கரை விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்து ஃபேவரைட்ஸ் என்ற ஆப்ஷனில் அதை சேமிக்கலாம். பிறகு, உங்கள் வாட்ஸ்அப் கணக்கிலேயே இந்த ஸ்டிக்கர்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ஸ்டிக்கர்கள், புகைப்படங்கள் மற்றும் அனிமேட் செய்யப்பட்ட GIF ஆகிய இரண்டு வடிவங்களிலும் கிடைக்கிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: New Year, New Year 2022, New Year Celebration, WhatsApp