Home /News /technology /

வாட்ஸ் அப்-பில் ஃபேக் நியூஸ் செக் செய்வது எப்படி - வந்தாச்சு புது வசதி

வாட்ஸ் அப்-பில் ஃபேக் நியூஸ் செக் செய்வது எப்படி - வந்தாச்சு புது வசதி

WhatsApp

WhatsApp

WhatsApp Update | உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் எந்தவொரு செய்தி, ஃபோட்டோ, வீடியோ, வைரல் செய்தி அல்லது வாய்ஸ் பதிவு என எதுவானாலும் அதுகுறித்து உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், கீழ்காணும் எண்களுக்கு அந்த குறிப்பிட்ட செய்தியை பார்வார்டு செய்தால் போதும். அவற்றின் உண்மைத்தன்மை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

மேலும் படிக்கவும் ...
வாட்ஸ்அப் என்ற புதிய அத்தியாயம் பிறந்த பிறகு, ஃபோனில் மெசேஜஸ் என்ற ஒரு வசதி இருப்பதே நம்மில் பெரும்பாலனவர்களுக்கு மறந்து போயிருக்கும். சாதாரண பட்டன் செல் முதல், தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்கள் வரையில் வெகு காலத்திற்கு பிறருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும், எதிர் முனையில் இருந்து தகவல்களை பெறவும் உதவிகரமாக இருந்தது மெசேஜஸ் என்னும் வசதி தான்.

ஆனால், வாட்ஸ்அப் வருகைக்குப் பிறகு, எல்லாமும் அது மட்டுமே என்றாகிவிட்டது. இப்போது, சில மார்க்கெட்டிங் மெசேஜ்கள், வங்கி பரிவர்த்தனை குறித்து அப்டேட்டுகள், அரசு அறிவிப்புகள், நெட்வொர்க் தகவல்கள் உள்ளிட்ட ஒரு சில செய்திகள் மட்டுமே மெசேஜஸ் வழியாக வருகிறது.

பெரும்பாலும் நண்பர்கள், சுற்றம் என யாராக இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஆன்லைனில் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாட்ஸ் அப் மூலமாகத்தான் நாம் தகவல்களை அனுப்பி வருகிறோம். பரஸ்பரம் ஒருவரை, ஒருவர் விசாரித்துக் கொள்வதும், தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வதும் வாட்ஸ் அப்-பில் இயல்பான ஒன்றுதான். ஆனால், வாட்ஸ் அப் செயல்பாடு இத்தோடு நின்றுவிடவில்லை.

ஒரு செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சிக்கு ஈடாக நாள்தோறும் எண்ணற்ற செய்திகள், தகவல்கள் நமக்கு வந்து சேருகின்றன. குறிப்பாக, எண்ணற்ற குரூப்களில் மெம்பர்களாக இருந்தால், அதன் தாக்கத்தை நாம் கண்டிப்பாக உணர்ந்திருப்போம். குரூப்களில் வந்து குவியும் செய்திகளை படிக்க நேரமின்றி, நாம் அதை ‘ஜஸ்ட் ஓப்பன்’ செய்துவிட்டு கடந்து செல்வது உண்டு.ஃபேக் நியூஸ் என்னும் கொடிய அரக்கன்

ஒரு தொலைக்காட்சி அல்லது செய்தித்தாள் வேண்டும் என்ற அவசியம் இல்லாமல், நாம் இருக்கும் இடத்தில், நம் உள்ளங்கைகளில் பல விதமான செய்திகளை கொட்டித் தரும் வாட்ஸ் அப், என்பது உண்மையில் பயனுள்ள ஒன்றுதான். ஆனால், அழகிய ரோஜாவில் முள் இருப்பதைப் போல, உண்மைச் செய்திகளுடன் பல போலி செய்திகளும் படையெடுத்து வரத் தானே செய்கிறது. இதற்குத்தான் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த சேவையை வாட்ஸ் அப் தொடங்கியிருக்கிறது.

Also Read : கூகுள் பே ஆப்பில் யூபிஐ பின் நம்பர் எப்படி மாற்ற வேண்டும்?

போலியான நியூஸ் கண்டறியும் முறை

உங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும் எந்தவொரு செய்தி, ஃபோட்டோ, வீடியோ, வைரல் செய்தி அல்லது வாய்ஸ் பதிவு என எதுவானாலும் அதுகுறித்து உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், கீழ்காணும் எண்களுக்கு அந்த குறிப்பிட்ட செய்தியை பார்வார்டு செய்தால் போதும். அவற்றின் உண்மைத்தன்மை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஆங்கிலம் மற்றும் 11 இந்திய மொழிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

எந்த செய்தி எந்த செய்தி நிறுவனத்திடம் விசாரிக்கலாம் என்பதற்கான விவரங்கள் இங்கே..

  • ஏஎஃப்பி - +91 95999 73984

  • பூம் - +91 77009-06111 / +91 77009-06588

  • ஃபேக்ட் கிரெசெண்டோ - +91 90490 53770

  • ஃபேக்ட்லி - ​​+91 92470 52470

  • இந்தியா டுடே - +91 7370-007000

  • நியூஸ்செக்கர் - +91 99994 99044

  • நியூஸ் மொபைல் - +91 11 7127 9799

  • குயிண்ட் வெப்கூப் - +91 96436 51818

  • தி ஹெல்தி இந்தியன் ப்ராஜக்ட் - +91 85078 85079

  • விஸ்வாஸ் நியூஸ் +91 92052 70923 / +91 95992 99372

Published by:Selvi M
First published:

Tags: Fake News, Technology, WhatsApp

அடுத்த செய்தி