• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - எப்படி தெரியுமா?

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் - எப்படி தெரியுமா?

Whatsapp

Whatsapp

இனி ஸ்மார்ட்போன் இல்லாமல் கூட வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும் என்ற புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

  • Share this:
சமீபத்தில் வாட்ஸ்அப் பயன்பாடு பற்றிய பல்வேறு மாற்றங்களும் அப்டேட்களும் வந்தபடி இருக்கின்றன. உலகெங்கும் கோடிக்கணக்கான யூசர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியை இணையத்திலும் கனக்ட் செய்து பயன்படுத்தும் தேர்வையும் வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தக் கூடிய அப்டேட்டும் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இனி ஸ்மார்ட்போன் இல்லாமல் கூட வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும் என்ற புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப்பா? சாத்தியமே இல்லை என்று நீங்கள் என்னலாம். ஆனால், உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் செயலி தவிர்த்து, மொபைல் வெப் மற்றும் கணினிகளிலும் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தகூடிய அம்சத்தை பீட்டா வெர்ஷனில் வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர், அனைத்து யூசர்களுக்கும் ரிலீஸ் ஆனது. தற்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணைய வசதி இல்லையென்றாலும், எந்த சாதனத்திலும் வாட்ஸ்அப் மெசன்ஜரை இணைக்கலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனமான மெடா (Meta) தெரிவித்துள்ளது.

Also read:  ரூ.150 தினசரி வருமானத்தில் சிறுக சேர்த்து பள்ளிக்கூடம் கட்டியவருக்கு பத்மஸ்ரீ விருது.. உத்வேக கதை

ஸ்மார்ட்போன் அல்லாத சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் ஃபோனில் உள்ள வாட்ஸ்அப் கணக்கில் லாகின் செய்வதற்கு, வாட்ஸ்அப் கணக்கின் முகப்புப் பக்கத்தில், வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் மீது தட்டவும்.

பிறகு, “linked devices” (இணைக்கப்பட்ட சாதனங்கள்) என்பதைக் கிளிக் செய்து, “Link a device” (ஒரு சாதனத்தை இணைக்கவும்) என்பதைத் தேர்வு செய்யவும். web.whatsapp.com என்ற வாட்ஸ்அப்பின் இணைய வெர்ஷனில் நீங்கள் லாகின் செய்ய, ஒரு QR குறியீட்டை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்த பிறகு, நீங்கள் வாட்ஸ்அப்பின் வெப் வெர்ஷனை பயன்படுத்தலாம். நீங்கள் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்கும் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி இல்லையென்றாலும் (நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும்), வெப் வெர்ஷனில் நீங்கள் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Also read:  தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் – விசித்திரமான காரணம்..

ஆனால், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ‘Multi-device meta’ என்ற சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷன் உங்கள் போனில் இருக்க வேண்டும். இல்லையென்றால், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று உங்கள் செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு புதுப்பித்துக் கொள்ளுங்கள். Multi-device meta என்பது ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு சாதனங்களில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்து பயன்படுத்தக்கூடிய அம்சம் ஆகும்.

Multi-device meta விருப்பம் உங்களுக்குத் தேவையில்லை என்றால், நீங்கள் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம். இந்த தேர்விலிருந்து நீங்கள் வெளியேறும் போது, நீங்கள் இதற்கு முன் இணைத்த வாட்ஸ்அப் வெப் கணக்குகளை எல்லாம் நீக்கி விடலாமா? என்று ஒரு செய்தி தோன்றும். நீங்கள் மீண்டும் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது, மறுபடி QR ஸ்கேன் செய்து, லாகின் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் ஒரு முறை லிங்க் செய்தால், இணைப்பை ரத்து செய்யும் வரை அல்லது வெப் வெர்ஷனில் லாக்-அவுட் செய்யும் வரை, உங்கள் மொபைலில் இணைய வசதி இல்லையென்றாலும், நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.

Also read: தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

இந்த சேவை எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் இல்லை என்பதையும் மெடா நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஒரு சில சாதனங்களில் சிக்கலாக இருப்பதால், இந்த அப்டேட்டை பயன்படுத்துபவர்களுக்கு பின்வரும் சிக்கல்கள் எழலாம்.

* இணைக்கப்பட்ட சாதனங்களில் வாட்ஸ்அப் செய்திகளை, சாட்களை நீக்க (Delete) முடியாது.
* இணைக்கப்பட்ட சாதனங்களில் லைவ் லொக்கேஷன் பகிரும் அம்சம் இல்லை.
* Multi-device meta வெர்ஷன், டேப்லெட்டுகள் மற்றும் iPhoneகளில் பயன்படுத்த முடியாது.
* ‘Broadcast’ செய்திகளை உருவாக்க முடியாது மற்றும் பார்க்க முடியாது.

அது மட்டுமின்றி, Multi-device meta வெர்ஷன் இருந்தாலும், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. 14 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் மறுபடி லாகின் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: