• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் எப்படி பயன்படுத்துவது?

மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் எப்படி பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் வெப்

வாட்ஸ்அப் வெப்

அலுவலக பணி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் மொபைலை எடுத்து அதில் வந்துள்ள மெசேஜ்களை பார்க்க வேண்டிய தேவையை இந்த வாட்ஸ்அப் வெப் தான் குறைத்தது.

  • Share this:
பல கோடி யூசர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான வசதிகள் உள்ளன. இதில் உள்ள சில சிறப்பான வசதிகள் பற்றி பலரும் அறிந்திருப்பது இல்லை. வெறும் சாட் செய்வதற்கு மட்டுமே பெரும்பாலான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலியை மொபைலில் மட்டும் இல்லாமல் உங்கள் கணினியிலும் பயன்படுத்த வாட்ஸ்அப் வெப் என்கிற வசதி சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது.

அலுவலக பணி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் மொபைலை எடுத்து அதில் வந்துள்ள மெசேஜ்களை பார்க்க வேண்டிய தேவையை இந்த வாட்ஸ்அப் வெப் தான் குறைத்தது. இதற்கு உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு இருந்தாக வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சிறப்பான அப்டேட் ஒன்றை விட்டுள்ளது. இந்த அப்டேட் இன்னும் பீட்டா வெர்ஷனாக தான் உள்ளது. அதாவது இது முழுமை பெறாமல் வெளியாகி உள்ளது.

இந்த பீட்டா அப்டேட்டில் உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமலே வாட்ஸ்அப் செயலியை உங்கள் லேப்டாப்பில் நீங்கள் இயக்க முடியும். பல வாட்ஸ்அப் பிரியர்களுக்கு இந்த புது அப்டேட் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் செயல்படும் என இதன் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் (தற்போது 'மெட்டா' என பெயரிடப்பட்டுள்ளது) தெரிவித்துள்ளது.

இந்த பீட்டா வெர்ஷனில் ஒரே நேரத்தில் 4 கணினியில் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால், ஒரே நேரத்தில் ஒரு மொபைலில் மட்டுமே நீங்கள் இதை பயன்படுத்த முடியும். மேலும் இதை உங்கள் மொபைலில் எளிமையாக அப்டேட் செய்யலாம். பலர் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துவதன் மூலம் இதிலுள்ள பிழைகளை வாட்ஸ்அப் நிறுவனம் சரி செய்துக்கொள்ள முடியும். மேலும் சிறந்த வசதிகளை கொண்ட அடுத்த வாட்ஸ்அப் வெப் அப்டேட் நமக்கு கிடைக்கும்.

உங்கள் கணினியில் இந்த பீட்டா வாட்ஸ்ஆப் வெப் வெர்ஷனை கொண்டு வர வாட்ஸ்அப் டெஸ்க்டாப் (WhatsApp desktop) என்பதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக வாட்ஸ்அப் செயலியை அதன் இணைதளத்திற்கு சென்று திறந்து கொள்ளவும். பிறகு உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் செயலியை திறந்து செட்டிங்ஸ்-இற்கு சென்று "Linked Devices" என்பதை டேப் செய்யவும்.

Also read... 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? இதோ ரூ. 20,000க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்!

அதன் பிறகு "Multi-Device Beta" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, எந்தெந்த லேப்டாப்களில் உங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டுமோ அவற்றில் உங்களுக்கான அக்கவுண்ட்டை திறக்க, அதில் வரும் QR கோடை உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். எப்போதும் போல இதிலும் உங்கள் சாட்கள் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும்.

வாட்ஸ்அப் வெப் பீட்டா வெர்ஷனில் நீங்கள் எந்த மெசேஜ்களையும் அழிக்க முடியாது. இதை நீங்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மொபைலை 14 நாட்களுக்கு மேல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், ஏற்கனவே லிங்க் ஆகியுள்ள மற்ற லேப்டாப்களில் வாட்ஸ்அப் வெப்பின் இணைப்பு துண்டிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: