ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தமிழ் உள்ளிட்ட இந்திய பிராந்திய மொழிகளில் WhatsApp-ஐ பயன்படுத்துவது எப்படி.!!

தமிழ் உள்ளிட்ட இந்திய பிராந்திய மொழிகளில் WhatsApp-ஐ பயன்படுத்துவது எப்படி.!!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பின் மொழியை (language of WhatsApp) மாற்ற 2 வழிகள் உள்ளன. முதலாவது உங்களது ஸ்மார்ட் போனின் மொழியை முழுவதுமாக மாற்றுவது. இரண்டாவது வழி வாட்ஸ்அப்பின் மொழியை மட்டுமே மாற்றுவது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

    பல்வேறு மொழிகளை கொண்ட நம் நாடான இந்தியாவில் மிக பிரபலமான மெசேஜிங் ஆப்-பாக இருக்கிறது மெட்டாவுக்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப். மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மிற்கான மிகப்பெரிய மார்க்கெட்களில் இந்தியாவும் ஒன்றாகும் . தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகள், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட வடஇந்திய மொழிகள், பெங்காலி மற்றும் ஒரியா உள்ளிட்ட கிழக்கு இந்தியா மொழிகள் என நாட்டில் மிக அதிக மக்கள் பேசும் மொழிகள் பிரபலமாக இருந்து வருகின்றன. எனவே ஒரு பரந்த யூஸர் தளத்தை பூர்த்தி செய்ய, வாட்ஸ்அப் பல முக்கிய பிராந்திய மொழிகளில் பல ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் தமிழ், இந்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் பல மொழிகள் உள்ளன.

    இப்போது, வாட்ஸ்அப்பின் மொழியை (language of WhatsApp) மாற்ற 2 வழிகள் உள்ளன. முதலாவது உங்களது ஸ்மார்ட் போனின் மொழியை முழுவதுமாக மாற்றுவது. இரண்டாவது வழி வாட்ஸ்அப்பின் மொழியை மட்டுமே மாற்றுவது. வாட்ஸ்அப் தற்போது iPhone இல் 40 மொழிகளுக்கும் மற்றும் Android டிவைஸ்களில் 60 மொழிகளுக்குமான மொழி ஒருங்கிணைப்பை (language integration) செயல்படுத்தி உள்ளது. இது உங்கள் டிவைஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை பொறுத்தது.

    உதாரணமாக நீங்கள் மொழியை தமிழுக்கு மாற்றினால், WhatsApp தானாகவே தமிழ் மொழியில் செயல்படத் தொடங்கும். உங்கள் வாட்ஸ்அப் WhatsApp Web-ல் தமிழ் மொழியே பிரதிபலிக்கும். WhatsApp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் மட்டுமல்ல KaiOS-ல் இயங்கும் போன்களை கொண்ட யூஸர்களும் பயன்படுத்த கிடைக்கிறது.

    ALSO READ |  இன்று முதல் முடிவுக்கு வரும் பிளாக்பெர்ரி போன்கள்!

    வாட்ஸ்அப் தானாகவே ஸ்மார்ட் போனின் இயல்பு மொழியை ஏற்று கொள்கிறது. எனவே, நீங்கள் மொபைலின் மொழியை தமிழ், பெங்காலி அல்லது வேறு எந்த மொழியிலும் மாற்றி கொண்டாலும் அந்த மொழியில் வாட்ஸ்அப் தானாகவே தோன்றும்.

    Android அல்லது iOS போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களில் மொழியை மாற்றுவதற்கான படிப்படியான முறைகள் இங்கே..

    Android-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு..?

    *உங்கள் மொபைலின் Settings-ற்கு செல்லவும்

    *System-க்கு சென்று language & input என டைப் செய்யவும்

    *பின் language & input-ல் இருந்து Languages என்பதை செலக்ட் செய்யவும்

    *Add a language என்பதை டேப் செய்து உங்கள் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்கவும்.

    iPhone-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு..?

    * iPhone-ல் Settings-ற்கு செல்லவும், பின் General-லுக்கு சென்று Language & Region-ஐ செலக்ட் செய்யவும்.

    * பின் iPhone Language என்பதற்கு சென்று அதில் தோன்றும் மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து Change to என்பதை டேப் செய்யவும்.

    KaiOS யூஸர்களுக்கு..

    *Settings-ல் Personalisation என்பதை செலக்ட் செய்யவும்

    * கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து Language-ஐ செலக்ட் செய்யவும்

    * நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து Ok என்பதை அழுத்தவும்

    இரண்டாவது வழியான WhatsApp-ல் நீங்கள் விரும்பும் மொழியை மாற்ற விரும்பினால் செய்ய வேண்டியது..

    *WhatsApp-ற்கு சென்று settings-ஐ ஓபன் செய்யவும்.

    *Chats-ற்கு சென்று App language-க்கு செல்ல வேண்டும்.

    *பின்னர் லிஸ்ட்டில் இருக்கும் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: WhatsApp