• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Gmail Tips : தவறாக இமெயில் அனுப்பிவிட்டீர்களா? டெலிட் செய்ய ஈஸி டிப்ஸ்!

Gmail Tips : தவறாக இமெயில் அனுப்பிவிட்டீர்களா? டெலிட் செய்ய ஈஸி டிப்ஸ்!

இமெயில் மெசேஜ்

இமெயில் மெசேஜ்

தவறாக அனுப்பும் இமெயில் மெசேஜ்களை குறிப்பிட்ட காலத்துக்குள் டெலிட் செய்துகொள்ளலாம். இந்த வசதி வாட்ஸ் அப்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜிமெயிலிலும் (Gmail) இந்த வசதி உள்ளது.

  • Share this:
அவசரமாக மெசேஜ் அனுப்பும்போது நம்மை அறியாமலேயே சில தவறுகள் நடந்துவிடும். அத்தகைய தவறான மெசேஜ்களை முன்பெல்லாம் திரும்பப்பெற அல்லது டெலிட் செய்ய முடியாது. தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால், தவறாக அனுப்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட காலத்துக்குள் டெலிட் செய்துகொள்ளலாம்.

இந்த வசதி வாட்ஸ் அப்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜிமெயிலிலும் (Gmail) இந்த வசதி உள்ளது என்பது கூடுதலான தகவல். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது அலுவல்பூர்வமாக ஜிமெயில் வழியாக மெசேஜ் அனுப்பும்போது ஏதேனும் தவறு நடந்துவிட்டால், 5 விநாடிகள் முதல் 30 விநாடிகளுக்குள் அந்த மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தவறான ஜிமெயில் அனுப்பிவிட்டால் திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள் :

கூகுளில் ஜிமெயிலை ஓபன் செய்து, செட்டிங்ஸூக்கு செல்ல வேண்டும். அங்கு ஜெனரல் (General) ஆப்சனை தேர்வு செய்து, அதில் இருக்கும் Undo Send என்பதை தேர்வு செய்யுங்கள். இப்போது உங்கள் ஜிமெயில் பக்கத்தில் Undo Send ஆக்டிவேட் ஆகியிருக்கும்.

ALSO READ |  வாட்ஸ் அப்பில் இப்படியொரு அம்சம் இருக்கா? இனி யார் தொந்தரவும் இருக்காது

எப்போது மெசேஜ் அனுப்பினாலும், டெஸ்க்டாப்பின் கீழ் வலதுபுறத்தில் Undo ஆப்சன் காண்பிக்கும். நீங்கள் உடனடியாக அதனை கிளிக் செய்து அனுப்பிய மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

செட்டிங்ஸில் 5 விநாடிகள் முதல் 30 விநாடிகள் வரையிலான Undo ஆப்சனுக்கான கால தேர்வும் இருக்கும். 30 விநாடிகளை நீங்கள் தேர்வு செய்தீர்கள் என்றால், மெசேஜ் அனுப்பி 30 விநாடிகளை வரை அந்த மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான மெசேஜை டெலிட் செய்வது எப்படி?

இதுநாள் வரை 15 ஜிபி வரையில் தரவுகளை சேமித்துக்கொள்ளும் வசதியை யூசர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கியது. தற்போது அந்த நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, கட்டண நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உங்கள் ஜிமெயிலில் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் இருந்தால், ஒவ்வொன்றாக டெலிட் செய்வது என்பது இயலாத காரியம்.

ALSO READ |  அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

நீண்ட நேரம் பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு மெசேஜையும் டெலிட் செய்வதை வெறுத்துவிடுவீர்கள். சோஷியல் மற்றும் புரோமோஷன் ஆகிய பகுதிகளில் இருக்கும் தேவையற்ற மெசேஜ்களை ஒரே நேரத்தில் குழுவாக டெலிட் செய்யும் வசதியும் உள்ளது.



முதலில், ஜிமெயிலை கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்னர், சோஷியல், புரோமோஷன் ஆகிய டேப்களில் இருக்கும் மெசேஜ்களை குழுவாக டெலிட் செய்ய வேண்டும் என்றால், Select all என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது டெலிட் (Delete) கொடுத்தால் குவிந்து கிடக்கும் ஜிமெயிலை குழுவாக டெலிட் செய்து கொள்ளலாம்.



முதலில், Select என்ற ஆப்சன் மட்டும் இருக்கும். அதனை தேர்ந்தெடுத்து ஒரு மெசேஜை தேர்வு செய்யும்போது, Select all என்ற ஆப்சன் காண்பிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: